கிடா ,வெட்டி பொங்கல் வைத்த நடிகைகள்

நித்தம் ஒரு வானம் முன் கருத்து ,
ஆக்சிடெண்ட் ஆனவங்ககிட்ட அதைவிட பெரிய ஆக்சிடெண்ட் பத்தி சொல்லி ஆறுதல் அடைய வைப்பது போல ,எதையாவது இழந்தவங்ககிட்ட அதைவிட பெரிய இழப்ப சொல்லி ஆறுதல் அடைய வைக்கறதை 2மணி நேரம் 20 நிமிஷம் சினிமாவா காட்டனா எப்படி இருக்கும் அது தான் நித்தம் ஒரு வானம் படம் .
**முழு படமும் பெஸ்ட் விஸுவல் ட்ரீட் .
**உணர்வுகள் என்கிற ரொட்டி துண்டு மேலே .காதல் என்கிற சாக்லெட் கிரீம் ,தன்னம்பிக்கை என்கிற டாப்கின்ஸ் ,மகிழ்ச்சி என்கிற பாக்கிங்கோடு சுவை பட கொடுத்திருக்காங்க இந்த படக்குழுவினர் .அசோக் செல்வன் நடிப்பில் முதல் நிலைக்கு வந்து விட்டார் .ரா.கார்த்திக் திரைக்கதையிலும் ,ஆர்டிட்ஸ்ட் ட்ரான்ஸ் போர்மனஷனலிலும் கையாண்ட விதம் படத்திற்கான வெற்றியை தருது
ரிதுவர்மா ,அபர்ணாபாலமுரளி ,ஷிவாத்மிகா ராஜசேகர் ,ஷிவாதா .இவர்களுக்கு சரியான காட்சிகள் கிடைத்ததால் நடிப்பில் கிடா வெட்டி பொங்கல் வைத்திருக்கிறார்கள் .