1973 ஆம் ஆண்டு நினைவுகள்

101 வயதில் நேற்று மறைந்த முன்னாள் தலைமை செயலாளர் பி .சபாநாயகம் 1973 ஆம் ஆண்டு தலைமை செயலாளராக இருந்த போது தான் தந்தை பெரியார் 1973 ல் நம்மை விட்டு மறைந்தார்.
அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் தலைமை செயலாளராக இருந்த பி . சபாநாயகத்திடம் தந்தைக்கு மாநில அரசு மரியாதையோடு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார் .
அப்போது பி .சபாநாயகம் அரசு உயர் பதவியில் இல்லாத ஒருவருக்கு மாநில அரசு மரியாதை செய்ய முடியுமா என்று தயங்கினார் சற்றும் தயங்காத கலைஞர் திரு காந்தி மறைந்த போது மத்திய அரசு எந்த கொள்கையின் அடிப்படையில் அரசு மரியாதை செய்ததோ அதே அடிப்படையில் தந்தைக்கு செய்வோம் இதனால் என் ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி, வடநாட்டிற்கு காந்தி என்றால் மகாத்மா என்றால் உலகம் முழுதும் ஒடுக்கப் பட்ட மக்களின் மகாத்மா நம் தந்தை பெரியார் என்று கோப்பை தயார் செய்து அரசு மரியாதை செய்தார் கலைஞர்.அந்த சூழலை திறம்பட செய்தவர் பி .சபாநாயகம் ,அவர்கள் அவருக்கு இப்போது தமிழக அரசு ,அரசு மரியாதை உடன் அடக்கம் செய்வது தமிழருக்கே உண்டான நன்றி கடன் ..