பா ஜ க பாசம் நடிகர் விஷாலுக்கு ஏன் ?

பா ஜ க பாசம் நடிகர் விஷாலுக்கு ஏன் ?
தி மு க முகாமிற்கு வேண்டியவர் போல் இமேஜை உருவாக்கி கொண்டு திடீரென டி .டி வி தினகரனை சந்திப்பார் ,கல்யாணம் செய்ய போவதாக பல சத்தியம் செய்வார் , நிச்சயம் கூட செய்வார் ஆனால் இதுவரை கல்யாணம் நடந்த பாடில்லை ,எப்போதும் குழம்பிய மன நிலையிலேயே இருக்க கூடியவர் நடிகர் விஷால் .இவர் சமீபத்தில் காசிக்கு சென்று திரும்பி வந்த உடன் காசி சுத்தமாக இருப்பதாகவும் அதற்க்கு காரணம் உங்கள் உழைப்பு தான் என்று ட்வீட் செய்து பிரதமர் மோடி அவர்களை பாராட்டி உள்ளார் .இதை தெடர்ந்து வரும் 11ந் தேதி கொடைக்கானளுக்கு பிரதமர் வரும் நிகழ்ச்சியில் அவர் முன்னிலையில் பி .ஜே .பி யில் விஷால் சேர போவதாக செய்தி வந்து கொண்டு இருக்கு ,பல கோடி ரூபாய் கடனிலும் ,வழக்கிலும் சிக்கி இருக்கும் விஷால் ,பி .ஜே .பி யில் சேர வாய்ப்பு இருப்பதாக நம்ப பட்டாலும் ,குழப்பத்தில் இருக்கும் விஷால் 11ந் தேதி திடீரென நடைப்பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தியோடு இணைந்து நடந்தும் ஆச்சர்ய படுத்தலாம்