காவல் துறைக்கு என்ன தான் ஆச்சு

கடந்த ஒரு வாரத்தில் வேலூர் சரக டி .ஐ .ஜி ஆனி விஜயா, ஐ எப் எஸ்  நிதி நிறுவனம் 6000 கோடி ரூபாய்க்கு மக்களிடம் மோசடி செய்ததை முறையாக விசாரிக்கப் படவில்லை என கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார் ,

அரும்பாக்கம் நகை கடன் வங்கியில் 18 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அச்சிறுபாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் ,

அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் சூர்யா என்ற கொலை கார ரவுடியை சரியாக கையாண்டு கைது செய்யப்படவில்லை என சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்

 இவர்கள் எல்லாம் சாதாரண கான்ஸ்டபிள்கள் அல்ல காவல் துறை அதிகாரிகள் இவர்களுக்கு கீழ் பல நிலை காவலர்கள் பணிபுரிந்திருப்பார்கள் இவர்களிடம்  அந்த அதிகாரிகள் என்ன மாதிரியான உண்மையை, நேர்மையை ,கண்டிருப்பார்கள் இவர்கள் பனி புரிந்த இடங்கள் எவ்வளவு நேர்மையாக இருந்திருக்கும் சந்தேகமே ,

காவல்துறை தேர்வை உடல்ரீதியாக மட்டும் அல்லாமல் மனரீதியாகவும் நடத்த வேண்டும், பயிற்சி கொடுக்க வேண்டும் .பயத்தை உருவாக்க வேண்டும்

இப்போ முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்கு கான்வாய் பணியை பார்க்க வேண்டாம் என்றும் ,காவலர்களுக்கு வாரம் ஒரு முறை ஒருநாள் விடுமுறையையும் ,15 நாட்களுக்கு ஒரு முறை இன்ஸ்பெக்டர்களுக்கும் விடுமுறை கொடுத்துள்ளார்.

முதல்வர் மட்டுமல்ல மக்களும் காவல்துறையை நம்புகிறார்கள் .இனியும் காவல் துறையினர் நேர்மை எண்ணத்தை உருவாக்க வில்லை என்றால் 1996 ஆம் ஆண்டு கலைஞர் காவல் துறை கல்லீரல் முக்கால் பகுதி அழுகிவிட்டது என்று சொன்னார்  அது மாறி முழுவதும் அழுகி விட்டது போல மக்கள் உணருவார்கள் .   

 

 

About Author