“விஜயானந்த்”வெற்றிக் கதையா?சுட்ட கதையா?

கால்பந்து கோப்பையல்ல கர்நாடகத்திலும் ஜெயிக்கலாம் உழைத்தால் பல நாட்டு வீரர்கள் பல முறை பந்தை உதைப்பார்கள் ஆனால் ஒரு வீரனின் திட்டமிட்ட உதையும் உழைப்பும் அவனுக்கு தங்கத்தால் ஆன ஷூவை பெற்றுத் தரும் இப்படி பல பேர் பிசினஸ் தொடங்கி உழைத்தாலும் விஜய் சங்கேஸ்வரின் திட்டமிட்ட உழைப்பு இன்று VRLஎன்ற வெற்றி கோப்பையை சாம்ராஜ்யத்தை பெற்று தந்து உருவாக்கியிருக்கிறது இவரின் வாழ்வியலை “விஜயானந்த்”
என்ற பெயரில் நிஹால் ஹீரோவாக நடிக்க இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுய சரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம்ஸ் நிறுவனம், பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.டிசம்பர் 9 ந் தேதி தமிழ்,கன்னடம், மலையாளம்,தெலுங்கு, ஹிந்தி, மொழிகளில் இத்திரைப்படம் ரீலீஸ் ஆக இருக்கிறது