எமோஷனை கட்டுப்படுத்திய பா.ரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படத்தோட இசை வெளியீட்டு விழாவில் பலவிதமான எண்டெர்டைன்மென்ட்களை வைத்திருந்தார்கள் . போனிக்ஸ் மகாலில் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்தது இதில் தன் அம்மாவை மேடைக்கு வரவழைத்தும் ,தன் குருநாதர் வெங்கட்பிரபுவை பெருமை படுத்தியும்,தான் இயக்கிய கபாலி ,ரஜினி படத்தை தயாரித்த கலைபுலி எஸ் .தாணுவை இசையை அறிமுக படுத்தவும் செய்தார் .எமோஷன் நிறைந்த இந்த நேரத்தில் அதை கட்டுப்படுத்தி நிகழ்வை தொடர செய்தார்
யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல்ஜாசன் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தில்
காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ்வினோத், வின்சு , சுபத்ரா, தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தென்மா இசையமைத்திருக்கிறார்.