காட்டி கொடுத்த பிளாக் டீ
பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட
பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.
ஒரு தட்டு நிறைய மிக்ஸர்..
முறுக்கு…நெய் பிஸ்கெட்டு
…முட்டை பிஸ்கட்.
இன்னொரு தட்டுல சிக்கென் கட்லெட்…
பருப்புவடை …பழபஜ்ஜி…!!!
குடிக்க காப்பியா டீயா…ன்னு அவங்க கேட்க…
எல்லாரும் டீ காப்பி ன்னு ஆர்டர் பண்ண…
நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
“அய் லைக் ப்ளாக் டீ ” ன்னு சொல்ல….
டீயும் வந்துச்சு…
எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக…
கூச்சத்தை கலைத்து…
பழபஜ்ஜியை ஒரு கடி கடித்து
ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..
எங்க அக்கா பையனுக்கு என்ன தோணிச்சோ..
திடீர்ன்னு,”மாமா….
சோடா ஊத்தலையா”ன்னு கேட்க..
(அடுத்து என்ன நடந்திருக்கும் உங்களுக்கே தெரியும் )