கிரிக்கெட் ஜோக்ஸ்

  1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே

No Ball-ன்னு சொல்வாங்க.,

  2.ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு

சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்

இருக்கும்.

3.All Out-ன்னு சொல்லுவாங்க..,

ஆனா 10 பேர் தான் Out ஆகி

இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா

ஒரு Batsman அவுட்..,

ரெண்டு கையயும் தூக்கினா Six..

( லாஜிக் இடிக்குதே..!! )

5.Goal Keeper-ன்னா கோல் விழாம

தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper

விக்கெட் விழாம தடுக்கணும் தானே…!

ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?

6.சில ஒவர் மட்டும் Powerplay-னுசொல்றாங்களே..

அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம

இருட்டிலயா விளையாடுறாங்க??

7.ஒருத்தரை மட்டும் Night Watchman-னு

சொல்வாங்க.. ஆனா அவரும் மேட்ச் முடிஞ்ச

Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்க

போயிடுவாரு..

8.Tea Break-னு சொல்வாங்க.. ஆனா

கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9.என்னதான் எல்லா பக்கமும்

Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை மட்டும்

“OFF ” Sideனு தான் சொல்வாங்க..

10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை

மட்டும் தான் ” Man of the Match “-ன்னு

சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம்

Women-ஆ….?

 

About Author