பொன்னியின் செல்வன் -2 திரைக்கருத்து (விமர்சனம்) மூவேந்தர்களின் கட்டுக்கடங்காத வீரமா ,அவர்களின் கள்ள காமமா ?

பொன்னியின் செல்வன் -2 திரைக்கருத்து (விமர்சனம்)
மூவேந்தர்களின் கட்டுக்கடங்காத வீரமா ,அவர்களின் கள்ள காமமா ?
ஆதித்ய கரிகாலன் இளவரசன் என்பதை மறந்து அடுத்தவர் மனைவி நந்தினியிடம் கண்காணாத இடத்திற்கு வா ஓடிப்போய் பிழைத்துக்கலாம் என்று கூப்பிடுவது ,அடுத்தவர் மனைவி நந்தினியை பார்த்த உடன் பார்த்திபேந்திர பல்லவ இளவரசன் உனக்காக என்ன வேணாலும் செய்கிறேன் சொல் என்று நெருங்குவது ,நந்தினி அம்மா ஊமை ராணியுடன் சில நாள் சுந்தரசோழன்வாழ்ந்தாலும் அவரோ வீரபாண்டியனுக்கு நந்தினியை பெற்றெடுப்பது என இந்த படத்தில் வீரத்தை விட காமத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இவங்க எல்லாம் வயசான பொண்ணுக்கு கூட வாயால பேசாம வெட்டிக்கிவிட்டு சாவாங்க என்கிற எண்ணத்தை விதைத்து இருக்கிறார் மணிரத்னம் .
அது மட்டுமல்லாமல் சுந்தர சோழன் வைணவர் கூட்டம் ,இவர்களை எதிர்க்கும் கூட்டம் சைவ கூட்டம் என்றும் அதிக நேரம் வரும் நீண்ட வசனங்கள் ,பாண்டிய ஆபத்து உதவிகளை திருடர்கள் போல காட்டியிருப்பது திரைக்கதையின் போக்கை நீர்த்து போக செய்ய வைக்கிறது .
வீரத்தை விட மதமும் ,காமமும் பிரதானப்படுத்துகிறார் இயக்குனர் இது போல நாவலில் கல்கி அவர்கள் விவரித்து இருந்தாலும் சினிமா என்கிற விசுவல் மீடியாவில் இயக்குனர் மூவேந்தர்களின் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் .
சரி இந்த படத்தில் பாசிட்டிவான விசயமே இல்லையா என்றால் நாற்பது வருட சினிமா அனுபவம் உள்ள மணிரத்னம் ,நடிகர்களான பிரபு ,சரத்குமார் ,விக்ரம்,பிரகாஷ்ராஜ் ,மற்றும் கார்த்தி ,த்ரிஷா ,ஐஸ்வர்யா ,விக்ரம்பிரபு மற்ற நடிகர்கள் அதிக பொறுப்புடன் நடித்ததே பாசிட்டிவாக படத்தை பார்க்க வைத்திருக்கு
குந்தவை அழகும் அவர் தோற்றமும் நடிப்பும் அறிவு அழகு.
இந்த படத்தோட கதை பொன்னியின் செல்வன் 1 ல் உங்களுக்கு தெரியும் 2 ல என்ன சொல்லறாங்கனா .
இலங்கை கடல்ல மூழ்கின அருள்மொழி வர்மனும் ,வந்திய தேவனும் பிழைத்து விட்டார்கள் என்பதை ஆழ்வார் கடியான் நம்பி மூலம் அறிந்த ஆதித்ய கரிகாலன் தன் தங்கை குந்தவை தம்பி அருள்மொழி வர்மன் பேச்சையும் கேட்காமல் நந்தினியையும், அவர்களின் சிற்றரசர்களையும் ,பெரிய பழுதேவரையும் சந்திக்க கடம்பூர் சென்று நந்தினியின் முன் நிற்கிறார் இவரை ஆபத்து சூழாமல் இருக்க வந்தியத்தேவனும் செல்கிறார் .பவுர்ணமி அன்று ஆதித்ய கரிகாலன்,சுந்தரசோழன்,அருள்மொழி வர்மன் ,மூவரையும் கொல்ல நந்தினி ,ரவிதாசன் ,பார்த்திபேந்திர பல்லவன் ,கோட்டிகா ,போடும் சூழ்ச்சியில் தெரிந்தே ஆதித்திய கரிகாலன் கடம்பூரில் கொல்லப்படுகிறார் ,
உடனே போர் தொடங்குகிறது ,எல்லா எதிரிகளையும் அழித்து வெற்றி அடைகிறார் அருள்மொழிவர்மன் ,பெருமைகொண்ட சுந்தர சோழன் அருள்மொழி வர்மனுக்கு பட்டம் சூட்டும் வேளையில் தன் சித்தப்பா மதுராந்தக சோழனுக்கு மகுடம் சூட்டி படத்தை முடிக்க பொன்னியின் செல்வன் 1ல் தோன்றிய வால் நட்சத்திரமும் மறைகிறது .கிளைமாக்ஸ் போர்காட்சிகளை தவிர மற்ற காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் .