பட்டது அரசன் -திரைவிமர்சனம்

Atharva, Ashika Ranganath in Pattathu Arasan Movie HD Images
பட்டது அரசன் -திரைவிமர்சனம்
ராஜ்கிரண் புகழ் பெற்ற கபடி வீரர் ,அரசாங்க வேலையை விட்டு விட்டு கபடி விளையாடி தன் ஊரின் மானத்தை காப்பாற்றியவர் ஒரு இரவு தன் இன்னொரு பொண்ட்டாட்டி மகன் ஆர் .கே .சுரேஷை கபடி ஆட அனுப்ப அவர் கபடி மைதானத்திலேயே இறக்கிறார் .
அடுத்த நாளே ஆர்.கே.சுரேஷின் மனைவி ராதிகா தன் மகன் அதர்வாவை கூட்டிக்கொண்டு சொத்தை பிரித்து கொண்டு தனியாக போக ,ராஜ்கிரனின் இன்னொரு மனைவி ,மகன் ஜே பி ,இன்னொரு மகன் ,மகளோடு தனியாக குடி இருக்கிறார் ,இரண்டு குடும்பமும் வெற்றிலை தோட்டம் போட்டு வியாபாரம் செய்கிறார்கள் .ஜே பி யின் மகன் தமிழ் தலைவார்ஸ் கபடிக்கு தேர்வாகிறார் இதற்கு பயிற்சி எடுக்க பணம் தேவைப்படுவதால் அதர்வா கொடுக்க முன்வரும் போது ஜேபி யால் அவமானப்பட்டு அனுப்ப ,ஜேபி மகன் தன்னோடு கபடி ஆடும் ராஜ் அய்யப்பா பேரனும் நண்பனுமானவரிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார் இதை சூழ்ச்சி செய்து வில்லன் ராஜ் அய்யப்பா ஊருக்கு துரோகம் செய்து விட்டதாக ஜேபி மகனை கூறி குடும்பத்தை ஒதுக்கி வைக்க அவமானத்தால் ஜேபி மகன் தூக்கிட்டு தற்கொலை செய்கிறார் .
அடுத்து வரும் ஊர் திருவிழாவிலும் ராஜ்கிரண் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வில்லன் திட்டம் போட ,அப்போது அதர்வா தன் குடும்பத்து ஆண்கள் ஒரு டீமாகவும் ,ஊர் ஒரு டீமாகவும் நின்று விளையாடி வெற்றி அடைந்து தன் தம்பி நிரபராதி என்று நம்ப வைப்பதாக சவால் விடுகிறார் .அதர்வாவின் இந்த சவாலை ராஜ்கிரணை தவிர தன் மகன்களே ஏற்று கொள்ள மறுக்கும் போது அதர்வா ஜேபி யோடும் ஹீரோயின் ஆஷிகா ரங்கநாத்துடனும் இணைந்து ஊர் டீமை எதிர்த்து ஜெயித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதையே ,
கபடியால் பிரிந்த ராஜ்கிரண் குடும்பம் குறிப்பாக அதர்வா ஆசைப்படி ஒன்றாக இணைய கபடி ஆட வேண்டும் ,
வில்லன் குடும்பமே கபடி ஆடினாலும் முதல் மரியாதை கிடைக்காத கோவம் ,ஹீரோயின் கபடி பிளேயர் இறந்த அவர் அப்பாவிற்காக அதர்வா டீமில் சேர்வது இப்படி 7 வயது முதல் 70 வயது வரை ஊரே கபடி கபடி என்று வாழ்வதாக கதை உருவாக்கி இருப்பது வரவேற்க கூடியதாக இருந்தாலும் எந்த எந்த காட்சிகளை எவ்வளவு வைக்க வேண்டும் என்பதில் சொதப்பி விட்டார் ,
அபத்தம் 1ஆர் .கே .சுரேஷ் மனைவி ராதிகா என்பது
அ 2 கபடி மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்கும் போது இடையே அதர்வா ஹீரோயினுக்கு தாலி கட்டி கபடி ஆட வைப்பது ,
அ 3 ஜேபி அதர்வாவை கிளைமாக்சில் கையை பிடித்து ஏற்று கொள்வது ,
அ 4 ரசனை இல்லாத காதல் காட்சிகள் ,
அ 5 டி வி சீரியல் போல கிளைமாக்ஸ் கபடி ஆட்டத்தில் ஹீரோ டீம் அடி வாங்குவதும் அதற்கான பின்னணி இசையும்
இயக்குனர் டீம் கவனத்திற்கு களவாணி ,வாகை சூடவா படத்தில் இருந்த உண்மையான யதார்த்தம் ,நடிகர்களின் சரியான நடிப்பு ,திட்டமிட்ட திரைக்கதை இந்த படத்தில் இருந்திருந்தால் பட்டது அரசன் வாகை சூடி இருப்பான்