திரை விமர்சனம் — திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்
தலைப்பு சுமாரா இருக்கும் ஆனா படம் சூப்பரா இருக்கும் கௌதம்வாசுதேவ்மேனன் சில படங்கள் தலைப்பும் நல்லா இருக்கும் படமும் நல்லா இருக்கும் அந்தமாதிரியான தலைப்பு தான் திருச்சிற்றம்பலம் ,எதிர்நீச்சல் படத்துல சிவகார்த்திகேயன் பெயர் குஞ்சிதபாதம் என்கிறத எல்லோரும் சுருக்கி கூப்பிடற மாதிரி இந்த படத்துல தனுஷை எல்லோரும் சுருக்கி பழம் பழம் னு கூப்பிடறாங்க அப்பா பிரகாஷ் ராஜ் மட்டும் திரு னு கூப்பிடறாரு ,
சரி இந்தப்படத்தோட கதையை பாப்போம் –
ஹீரோ தனுஷ் அப்பா பிரகாஷ் ராஜ் தாத்தா பாரதிராஜா வுடன் எம் .ஐ ஜி பிளாட்ல குடியிருக்காங்க இவங்க போர்சஷன் க்கு கீழ் வீட்டில நித்யாமேனன் ,அவர் அம்மா அப்பா தம்பி இருக்காங்க சின்னவயசில் இருந்தே நித்யாமேனன் இருவரும் மிக நெருக்கமாக புரிந்து கொண்ட நண்பர்களா வளர்றாங்க
தனுஷ் ஃபுட் டெலிவரிபாயா இருக்கும் போது ஒரு நாள் ஸ்கூல் மேட் பணக்கார ராசிவைகண்ணா சந்திச்ச உடன் நித்யாமேனன் கிட்ட ராசிவைகண்ணாவை காதலிக்க ஐடியா கேட்கறாரு தனுஷ் தன் காதலை சொல்லும் போது ராசி கண்ணா நட்பா தான் பழகினோம்னு சொல்லறாங்க ,தொடர்ந்து பிரகாஷ்ராஜ்க்கு பக்கவாதம் வந்து வீல் சேருக்கு வந்தர்றாரு இத பார்த்த பாரதிராஜா ஒரு முறை பிரகாஷ் ராஜ் மாமனார் வீட்டுக்கு கிராமத்துக்கு போய்ட்டு வரலாமுன்னு நித்யா மேனனுடன் போறாங்க அங்க பிரியாபவானி சங்கரை பார்த்த தனுஷ் அவங்கள லவ் பண்ண முயற்சிக்கும் போதே அதை பிரியாபவானி சங்கர் கண்டுக்காம போறாங்க இதனால மனம் உடஞ்சறாரு தனுஷ். இப்போ பாரதிராஜா தனுசுக்கு லவ் பீல் பத்தி புரிய வச்சு அது நித்யாமேனன் கிட்ட இருப்பதா சொல்ல தனுஷ் சிறிய யோசனைக்குப்பிறகு நித்யாமேனன் கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்க நித்யா மேனன் எடுக்கும் முடிவுதான் இந்த படத்தோட மீதி கதை
ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் அனிருத் இசையில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிச்சிருக்காங்க
இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் பல ஆண்டுகளா பார்த்த கதையா இருந்தாலும் தனுஷ் ஹீரோயின்ககிட்ட பல்பு அதாவது மொக்க வாங்கறது இப்போஇருக்கிற யங்ஸ்டர் ரசிகர மாதிரி இருக்கு ,
பாரதிராஜா பேசும் வசனங்கள் இன்றைய வாழ்வியல்
அனிருத் இசையில் மித்ரன் ,ஆர்,ஜவகர் இயக்கியிருக்கறாரு தனுஷ் பிரகாஷ்ராஜ் யை வெறுப்பதற்கான பிளாஷ் பேக்கை இன்னும் பலமாக வைத்திருக்கலாம் வாழ்க்கையில் ஜெயிக்கற காதலை பற்றி பாரதிராஜா பேசும் வசனங்களில் இயக்குனரின் புரிதல் ரசிக்கமுடியுது