காட்டேரி – திரை விமர்சனம்

கதை பெருசா இல்லனாலும் சொல்லிடுவோம் மலைக்கு மேல் இருக்கும் ஒரு கிராமத்தில் தங்கப் புதையல் இருப்பதாக சென்னையில் வயதான தோற்றத்தில் இருக்கும் ஜான் விஜய் சொல்வதைக் கேட்டு வைபவ், கருணாகரன், ரவி மரியா ,சோனம் பஜ்வா ,ஆத்மிகா , அனைவரும் அந்த கிராமத்திற்கு செல்கின்றனர். அந்த கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் மனித தோற்றத்தில் இருந்தாலும் வந்து போகும் பேய்கள்னு தெரிஞ்சிக்கிறாங்க .
ஃப்ளாஷ்பேக்கில் வரலட்சுமி தன் சகோதரியோடு கிணறு வெட்ட அந்த கிணற்றுக்குள் இருக்கும் காட்டேரி ஒரு மனிதனை கிணற்றுக்குள் போட்டால் ஒரு பேரல் தங்கம் கொடுக்கிறது.இதை தெரிஞ்சுகிட்ட போலீஸ் எஸ் ஐ ஜான் விஜய் வரலட்சுமி குடும்பம் உட்பட அந்த கிராமத்தையே கிணற்றுக்குள் கொலை செய்து போட பேரல் பேரலாக தங்கம் கிடைக்குது இந்த தங்கங்களை ஜான்விஜயால் அனுபவிக்க முடிந்ததா பல ஆண்டுகளுக்குப் பிறகு வைபவ் குழுவால் இந்த தங்கத்தை
மீட்க முடிஞ்சதா என்பதுதான் படத்தோட முடிவே குடும்பத்தோடு பார்க்கணும்னு சினிமா எடுப்பாங்க. அப்படிதான் இவங்களும் எடுத்திருப்பாங்க அதனால நீங்க குடும்பத்தோட படத்தை பார்க்க போன தனித் தனியா தனித்தனி தியேட்டர்ல பாருங்க. ஏன்னா ரவிமரியா, வைபவ் , கருணாகரன் பேசும் வசனங்கள் ,நடவடிக்கைகளையும் குழந்தைகளுடன் பார்ப்பதற்கு ஏதுவா இருக்காது
இயக்குனர் டி கே யாமிருக்க பயமேன் வெற்றி படத்தை தொடர்ந்து கவலை வேண்டாம் , இப்போ காட்டேரி படத்தை எடுத்திருக்காரு பி. எஸ் .வினோத்ன் ஒளிப்பதிவு காட்சிக்கு பொருத்தமா இருக்கு .எஸ் .என் .பிரசாத்ன் இசையில் கத்தல் அதிகம் ஸ்டூடியோ கிரீன் தயாரிச்சிருக்காங்க .