வீரன் – மகுடமா ?? மந்தமா??திரைவிமர்சனம்

வீரன் – மகுடமா ?? மந்தமா?? திரைவிமர்சனம்
கொஞ்சம் ஃபோராக இருந்தாலும் வேர் போல் பகுத்தறிவு கருத்திற்கு பலம் சேர்க்குது .
கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்த படம் ரொம்பவே நெருக்கமாக இருக்கும்
குறிப்பாக முடிவெட்டும் தொழிலாளியின் மகன் சர்வ சாதாரணமாக பணக்கார வீட்டு பெட் ரூம் வரை சென்று தன் நண்பன் ஆதியை சந்திப்பது ,
ஹீரோயின் ஆதிராராஜ் வீட்டுக்குள் செல்வதோடு மட்டுமில்லாமல் அவங்க வீட்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அனுமதிப்பது போன்ற காட்சிகளில் ஏற்ற தாழ்வு இல்லாததை டயலாக் மூலம் சொல்லாமல் விசுவலாக உணர்த்தி இருப்பது வரவேற்ககூடியது.
மற்றும்
கிராமத்தில் வாழும் சின்ன சின்ன மனிதர்களின் தனித்துவத்தை ,காளிவெங்கட் .முனீஸ்காந்த் ,ட்ராக்ட்ர் ஓட்டுபவர் ,ஹீரோயின் அம்மா ,வீரன் கோவில் பூசாரி போன்ற கதாபாத்திரங்கள் வழியே காட்டி கிராம யதார்த்தத்தை ரசிக்க வைக்கிறார் .
மேலும் கிராம மக்களின் பிக் பாஸ் நிகழ்ச்சி மோகம் ,வடமாநிலத்தவரிடம் ஹிந்தியில் பேசி வேலை வாங்கும் கிராமத்தினர் ,என நையாண்டி செய்து இன்றைய கிராமத்தை கண் முன் காட்டுகிறார் இயக்குனர் ஏஆர்கே.சரவணன் .
நான் தான் சாமி என்றோ ,சாமி இல்லை என்றோ தனிப்பட்ட கருத்தை திணிக்காமல் கிராமத்து மக்களுக்கு தன்னம்பிக்கை தருகிறது ஹீரோ கேரக்டர்.
இவ்வளவு இருந்தும் இயக்குனர் எங்கே சறுக்கினார் என்றால் ஹீரோவாக ஆதியை தேர்வு செய்து அவர் சுமக்க கூடிய அளவிற்கு லைட்டான காட்சிகள் அவருக்காக அமைத்தது . .
கொங்கு மண்டலம் மற்றும் அதை சார்ந்த மாவட்ட மக்களின் பிரதான பிரச்னை விளை நிலங்களில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்க அவர்கள் விருப்பம் இல்லாமல் நிலங்களை பிடுங்க உத்தரவு போட்டது, இது இன்னும் மக்கள் பிரச்சனையாகவே இருக்கு .இந்த பிரச்சனையை கொஞ்சம் மாற்றி மின்சாரம் எடுத்து செல்லும் லேசர் கேபிள் அதை எதிர்க்கும் ஹீரோ ,குறைந்த அளவு கிராம மக்கள் என ஒரு பெரிய பிரச்சனையை ,பிரமாண்டமாக வந்திருக்க வேண்டிய படத்தை மினியேச்சர் ஆக்கிவிட்டனர் இந்த படக்கழுவினர்.
இயக்குனர் விஜய் ன் கத்தி படம் போல் மகுடம் சூட வந்திருக்க வேண்டிய படம் தவறிவிட்டது .

About Author