லைகர் திரைவிமர்சனம்

விஜய்தேவரகொண்டா 12 வருட சினிமாவில் அர்ஜுன் ரெட்டி ,கீதகோவிந்தம்,நோட்டா இந்த டப்பிங் படங்களை தவிர நேரடியான தமிழ் படங்கள்ள நடிக்களை
ஆனா தமிழ் நாட்டுல இவ்வளவு பெரிய வரவேற்பு எப்படி கிடைக்குதுனு கேட்டா யூத் ஃபுல் ஹீரோ அப்படீன்னு சொல்லறாங்க ,நேரம் ஒர்க் அவுட் ஆகுதுன்னு சொல்லுவாங்க இது எல்லாத்தையும் விட அவர் தேர்வு செஞ்சு நடிக்கிற கதை தான் காரணம் அந்த மாதிரியான கதையா லைகர் னா இல்ல ரொம்பவே வீக்கான கதை
ஹீரோ அவர் அம்மா ரம்யாகிருஷ்ணனோடு மும்பையில் MMA Fighter ஆக முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கும் போது ஹீரோயின் அனன்யா பாண்டேவை சந்திக்கறாரு லவ் பண்ணறாரு இத ரம்யாகிருஷ்ணன் கண்டிக்கறாங்க ஹீரோவுக்கு திக்கு வாய் இருப்பதால் நார்மலா பேச முடியாது ஐ லவ் யூ னு கூட சொல்ல முடியாது னு தெரிஞ்சிகிட்ட அனன்யா அவரை அவமானப்படுத்தி லவ் பன்ன முடியாதுனு சொல்லறா ங்க இதனால் ரொம்பவே நொந்து போன ஹீரோ MMA ல அதிக கவனம் செலுத்தி நேஷனல் சாம்பியன் ஆகறாரு ,அமெரிக்க வுல உள்ள இந்திய பணக்காரரால அங்க போய் மைக் டைசன் உட்பட பல பிரச்சனைகளை சந்திச்சு உலக சாம்பியன் ஆனாரா இல்லையா என்பது தான் மீதி கதையே
இதுவரை அழகா பார்த்த ஹீரோவா முதல் பாதியில சுமாரா காட்டி இரண்டாம் பாதியில் 6 பேக்குடன் காட்டியிருக்காங்க கூடவே திக்கு வாயோடு பேசறதை சகிக்க முடியலை பெருசா வந்திருக்க வேண்டிய ஸ்டண்ட் காட்சிகல் நமத்து போன பட்டாசு வெடிச்ச மாதிரி இருக்கு அமெரிக்காவுல லேடி Fighters களோடு போடும் சண்டை மட்டும் கவனிக்க வைக்குது
ஹீரோயின் அனன்யா பாண்டே படத்துக்கு பெரிய மைனஸ் வளர்ந்த சைல்ட் ஆர்ட்டிஸ்ட் மாதிரி இருக்காங்க
ரம்யா கிருஷ்ணன் தன் மகன் சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்தவன் எந்த லாஜிக் குல சொல்லறாங்கனு தெரியல
இயக்குனர் பூரி ஜெகநாத் 20 வருடமா தெலுங்கு சினிமாவுல நிறைய ஹிட் படங்களை கொடுத்தவாறு ஒரு முறையாவது சிங்கம் ,வீரம் ,சர்பட்ட பரம்பரை படத்தை பாத்திருந்த இந்த படத்தை ஒழுங்கா எடுத்திருப்பாரு
பாவம் கரண் ஜோக்கர், சார்மி
லைகர் -லையர்