ராஜபுத்திரன் :- திரை விமர்சனம்

ராஜபுத்திரன் :- திரை விமர்சனம்
நடிகர் பிரபு ,ஹீரோயின் கிருஷ்ணபிரியா இரண்டு பேரின் நடிப்பிலும் ,அழகிலும் ராஜபுத்திரனை ரணத்தில் இருந்து சின்னதாக தப்பிக்க வைத்திருக்கு .கிராமத்து கெட்டப்பில் ராஜாதிராஜா ராதா ,என் ஆசை மச்சான் ரேவதி ,ராதிகா போன்ற நடிகைகளின் சாயலில் நிறைவாக நடித்திருக்கிறார்
1990 களில் இந்தப்படத்தின் கதை நடப்பதாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் மகாகந்தன்.
ஆனால் படம் இந்த ஜெனெரேஷன் ரசிகர்களுக்கான மேக்கிங் இல்லாமல் ரொம்பவே பழமையானதாகவும் ,லிவிங்ஸ்டன் ,மன்சூரலிகான் போன்ற நடிகர்களின் கெட்டப் அதைவிட பழமையாகவும் இருக்கு .
கதை பாசமான அப்பா பிரபு தன் சொத்தை வித்தாலும் தன் மகன் வெற்றியை வேலைக்கு உள்ளூர் ,வெளியூர் எங்கும் அனுப்ப மாட்டார் இதனால் என்ன பிரச்சனைகள் உருவாகுதுங்கறது தான் .
இதற்கான காட்சிகளில் கொஞ்சமும் புத்திசாலி தனம் இல்லை ,ரசனையும் இல்லை .நல்ல தயாரிப்பாளர் கே .எம் .சபி க்கு திறமையான இயக்குனர் கிடைத்திருந்தால் ராஜபுத்திரன் வெற்றிபுத்திரனாக்கிருக்கும்