ராங்கி -திரைவிமர்சனம்

ராங்கி -திரைவிமர்சனம்
எந்த ஹீரோ நடிச்சாலும் தோல்வி அடைய கூடிய திரை கதையில் திரிஷா வை வைத்து வெற்றிக்காக முயற்சி செஞ்சிருக்காரு இயக்குனர் சரவணன் .திரிஷா தெளிவான ,தைரியமான ஜர்னலிஸ்ட் ,தன் அண்ணன் மகளின் போட்டோவை வைத்து போலியாக உருவாக்க பட்ட பேஸ் புக் கை ,திரிஷா டெலீட் செய்வதற்கு முன் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள 17 வயது தீவிரவாத இளைஞனுடன் சாட்டிங் செய்கிறார். அப்போது அந்த இளைஞன் மீது சொல்ல முடியாத ஈர்ப்பு த்ரிஷாவிற்கு ஏற்பட ,த்ரிஷா தன்னை தொந்தரவு செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் பெயரை சொல்ல அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் கொல்லப்படுகிறார் ,உடனே தேசிய புலனாய்வினர் ஆப்ரிக்காவில் இருக்கும் அந்த தீவிரவாத குழுவை பிடிக்க த்ரிஷாவின் அண்ணன் மகளை பிடிக்க அப்போது தான் திரிஷா தன் அண்ணன் மகள் பேஸ் புக்கை தான் பயன்படுத்துவதாக சொல்கிறார் . தேசிய புலனாய்வினர் தீவிரவாதிகளை பிடிக்க இருவரையும் ஆப்பிரிக்கா விற்கு அழைத்து செல்கிறார்கள் .கடைசி வரை ஸ்கூல் படிக்கும் த்ரிஷாவின் அண்ணன் மகளுக்கு தான் எதற்கு போகிறோம் ,தன் போட்டோவை ஒரு தீவிரவாதி காதலிக்கிறான் என்பதும் தெரியாது .இந்த சூழலில் ஆப்பிரிக்காவில் என்ன நடந்தது யார் செத்தா ,யார் பொழச்சா என்பதுதான் மீதி கதையே ,
சல்லடை ஓட்டைகள் போல திரைக்கதை ஓட்டைகள் ,இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை ,திரிஷா ஆண்களுக்கு காதலை பற்றியும் ,செக்ஸை பற்றியும் கிளாஸ் எடுத்து விட்டு 17 வயது தீவர வாத இளைஞ்சன் மேல் இவரே க்ரஷ் ஆவதெல்லாம் கொடுமை ,அந்த இளைஞனை த்ரிஷா பார்க்க வேண்டும் என சாட் செய்ய ஆப்ரிக்காவில் இருந்து அடுத்த நாளே த்ரிஷாவின் அண்ணன் மகள் படிக்கும் அன்னை வேளாங்கண்ணி ஸ்கூல் முன் வந்து நிற்பது சிரிக்க வைக்கிறது ,முதல் பாதியில் வெற்றிக்கான நிச்சயத்தை தந்து இரண்டாம் பாதியில் தோல்விக்கான உத்தரவாதத்தை தந்திருக்கு ஏ ,ஆர் .முருகதாஸின் கதை .