யானை முகத்தான்-கடவுள் இருக்கும் இடத்தை கடவுளே சொல்லும் கதை

யானைமுகத்தான்-
திரை விமர்சனம் ,
கடவுள் இருக்கும் இடத்தை கடவுளே சொல்லும் கதை
ஏமாற்று காரரான ஆட்டோ ஓட்டும் ரமேஷ்திலக் தான் ஏமாற்றிய வயதான தம்பதியிடம் சென்று அன்னைக்கு கோயிலுக்கு சுற்றி கூட்டி கொண்டு போய் உங்ககிட்ட அதிக பணம் வாங்கிட்டேன் இந்தாங்கனு கொடுக்கும் போது .அவர்கள் சின்ன சிரிப்போடு எனக்கு தெரியும் தம்பி பதிமூணு வருசமா நான் கோயிலுக்கு போய்கிட்டு தான் இருக்கேன் அன்னைக்கு உனக்கு பணத்தேவை இருந்திருக்கு அதனால தான் நீ என்கிட்டே அதிகமா வாங்கிட வச்சிக்கோனு சொல்லும் ஒரு காட்சி இந்த படம் வேஸ்டுன்னு நம்ம சொல்ல விடாம தடுக்குது .இது போல இரண்டாம் பாதியில் சில காட்சிகளை வைத்த இயக்குனர் ரெஜிஷ்மிதிலா முதல் பாதியை யோகிபாபு மற்றும் சிலரை வைத்து பேசியே ஒரு வழியாக்கிட்டாரு .
கதை என்னான்னா –
கணேச பக்தனான ரமேஷ் திலக் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதால் அவர் மட்டும் பார்க்கும் இடங்களில் விநாயகர் படம் தெரியாமல் மறைந்து போய்விடுகிறது ,யோகி பாபு உருவில் வரும் விநாயகர் பல வகையில் முயற்சி செய்யும் ரமேஷிற்கு ,எப்படி காட்சி தருகிறார் என்பது தான் படத்தின் முடிவே .ஊர்வசி ,கருணா சில ராஜஸ்தான் நடிகர்கள் நடிப்பு மற்றும் அயோத்தி படம் போல இந்த படத்தில் எங்கும் திணிக்காத மனிதாபிமானம் நல்ல முயற்சி .