மிரள் திரைவிமர்சனம்

மிரள் திரைவிமர்சனம்
ஹீரோ பரத், வாணிபோஜன் தம்பதிகளில் வாணிபோஜன் ,பரத்தோடு இரவில் காரில் போகும் போது மலைப்பகுதியில் மர்ம உருவம் ஒன்று பரத்தை அடித்து போட்டுவிட்டு வாணிபோஜனையும் அவங்க மகனையும் கொலைசெய்வதாக கனவு காண்கிறார் .பலமுறை வந்த இந்த கனவினால் மனதளவில் பாதிக்கப்பட்ட பரத்தையும் வாணிபோஜனையும் ஒரு முறை குல தெய்வம் கோவிலுக்கு வந்து கிடா வெட்டி படையல் போட சொல்கிறார் வாணிபோஜன் அம்மா மீராகிருஷ்ணன் .என்ஜினீரான பரத் தன் நண்பன் ராஜ்குமாரையும் அழைக்க முதலில் பரத்தை போக சொல்லி விட்டு அடுத்த நாள் கிளம்பி ராஜ்குமாரும் செல்கிறார் .பரத் காதல் கல்யாணம் செய்ததால் கோவமான கே .எஸ் .ரவிக்குமார் பேரனை பார்த்த உடன் சமாதானம் ஆகிறார் .
பரத் அவசரமாக கிராமத்தில் இருந்து இரவு காரில் கிளம்ப உடன் மனைவியும் ,மகனும் போகிறார்கள் .போகும் வழியில் மலை பகுதியில் மர்ம உருவம் பரத்தை அடித்து போட்டுவிட்டு வாணிபோஜனையும் அவங்க மகனையும் கடத்த அங்கு ஏற்பட்ட மோதலில்அந்த இரவில் பரத் குடும்பமே இறக்கிறது .விடிந்த பிறகு பரத்தும் வாணிபோஜனும் உயிரோடு கிராமத்து வீட்டுக்கு வருகிறார்கள் .அப்போது தான் மர்ம உருவமாக வந்தது பரத் என்று , அப்போ காரில் வந்த அந்த குடும்பம் யாருடையது பாரத்திற்கும் அந்த குடும்பத்திற்கும் என்ன தொடர்பு என்பது தான் மீதி படமே .
பரத் வாணிபோஜன் இருவரும் ஷட்டிலான நடிப்பை தந்திருக்கிறார்கள் ,இயக்குனர் சக்திவேல் மட்டும் சஸ்பென்ஸை ரொம்ப நீளமாக சொல்லிய விதமும் ,ஒரே லொகேஷனலில் நிறைய காட்சிகள் எடுத்து தொய்வு அடைய வைக்கிறார் ,அதே சமயம் காரில் வரும் தம்பதியை காட்டும் போது திரில்லின் உச்சம் ,அம்மானுசிய சக்தியை காட்டும் படங்களில் ரசிகர்களை பயமுறுத்த என்ன என்ன செய்வார்களோ அதையே செய்து எதிர் பார்ப்பை குறைக்கிறார்கள்
மிரள்- மின்மினி