மாவீரன் -துணிந்தவனா?? தணிந்தவனா ?? திரை விமர்சனம்

மாவீரன் -துணிந்தவனா?? தணிந்தவனா ?? திரை விமர்சனம்
இந்த படத்தோட ஹீரோ சிவகார்திகேயனு நாம நம்பி உட்காந்தா ?முழு படத்தையும் யோகிபாபு தன் வசப்படுத்தி சிரிக்க வைக்கறாரு .அடுத்ததா அமைச்சரா வருகிற மிஷ்கின் மிரட்டவும் சிரிக்கவும் வைக்கறாரு ,சிவகார்த்திகேயன் அம்மாவ சரிதா மிளகாயை கடிச்சங்க மாதிரி கார ,சாரமா நடிச்சிருக்காங்க. .இந்த மூணு பேருக்கும் space கொடுத்திட்டு சிவகார்த்திகேயன் என்ன செய்யறார்னா மேல இருக்கறவன் சொல்லறமாதிரிஅதாவது மேலே இருந்து அவர் காதுக்கு கேட்கற குரல் சொன்ன படி fight ம் ,பஞ்சு டைலாக்கும் பேசி இருக்காராரு .
கதை — கூவம் ஓரம் குடி இருக்கும் சிவகார்த்திகேயன் ,குடும்பம் உட்பட பல குடும்பங்களை புதிதா கட்டுன அடுக்கு மாடியில குடிமாத்தறாங்க மிஸ்கின் & கோ ,கட்டிடங்களை ரொம்ப மோசமா கட்டி இருக்கும் மினிஸ்டர் மிஸ்கின் & கோ வை எதிர்க்க சொல்லி கார்டூனிஸ்டும் ,பயந்த சுபாவம் உடைய சிவகார்த்திகேயன் காதுக்கு மட்டும் மேலே இருந்து ஒரு குரல் கேட்குது அந்த குரல் சொல்லற மாதிரி எதிரிகளை அடிச்சு நொறுக்கறாரு,
இந்த உண்மைய வில்லன் குழு கிட்ட சொல்லி தான் தப்பிச்சாலும் ,தான் குடி இருக்கும் மக்களுக்காக மீண்டும் மேலே இருக்கும் குரல் சொல்லறதை கேட்க ஆரம்பிக்கறாரு சிவகார்த்திகேயன். அதன் பிறகு என்ன நடக்குது என்பது தான் கிளைமாக்ஸ்..
ரொம்ப ரொம்ப நீளமான படம் ,ரொம்ப ரொம்ப நீளமான காட்சிகள் ,முக்கியத்துவம் இல்லாத ஹீரோயின் அதிதி ,பரத் சங்கரின் பின்னடைவான இசை,குறைந்த அனுபவம் கொண்ட இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கம் இதெல்லாம் இருந்தாலும் சிவகார்த்திகேயன் நடிப்பால் முதல் பாதி சிரிப்பு இரண்டாம் பாதி சின்ன கசப்பு …