மாமன்னன்-சட்டமா???சாதியா??? -திரைவிமர்சனம்-

மாமன்னன்-சட்டமா???சாதியா??? -திரைவிமர்சனம்-
இந்த படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் என்று பார்ப்பதை விட ஒரு 100 ஆண்டு கால இயக்கத்தின் தலைவர் மகன் ,அமைச்சர் உதயநிதி என்று இணைத்து பார்த்தால் கூடுதல் சுவராசியம் இருக்கும் .
ரிசர்வ் தொகுதி
எம் எல் ஏ வடிவேலுவின் மகனாக உதயநிதி நடித்து அந்த
எம் எல் ஏ படும் அவமானத்தை தங்க முடியாமல் துப்பாக்கி ,அருவா போன்றவற்றை தூக்கி சண்டை செய்கிறார்,அவர் மனதுக்குள் உருவாகும் வலி நடிப்பாக இருந்தாலும் ,நிஜ வாழ்க்கையில் தலைவரின் மகனாக நாளைய தலைவராக ,நாளைய முதல் அமைச்சராக ,ரிசர்வ் தொகுதி எம் எல் ஏ ,க்கள் மற்றும் தொண்டர்களின் வலியை உணர்ந்து பகத்பாசில் போன்ற சாதி அரசியல் செய்யும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க நம்பிக்கை தரும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு அரசியல்,அதை தூக்கி பிடிக்க சாதி கூட்டம் இருப்பதால் தென் மாவட்டத்தை சேர்ந்த இயக்குனர் மாரிசெல்வராஜ் க்கு மேற்குமண்டல அரசியல் கொஞ்சம் புடி படாமல் இருக்கு இருந்தாலும் இழுத்து புடிச்சி படத்தை தேற்றிவிட்டார் .மறைந்த நடிகை ஸ்ரீவித்யா போன்று உதயநிதியின் அம்மாவாக கீதாகைலாசம் நடித்து கவனிக்க வைக்கிறார் .நவீன ஆயுதம், வன்முறை என பெருசா செய்யாமல் பகத்பாசில் நடிப்பில் பயத்தையும் ,வடிவேலு நடிப்பில் பிரமிப்பையும் உருவாக்கி இருக்கிறார்கள் .
குறைந்த கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதை அமைத்து இருப்பதால் படம் விறு விறுப்பாக இருக்கு .
இந்த படத்தோட கதை – ஹீரோ உதயநிதி சிறுவனாக தன் நண்பர்களோடு கிணற்றில் குளிக்கும் போது பெரிய சாதியை சேர்ந்த சிலர் கல்லால் அடிக்க உதயநிதி மட்டும் தப்பிக்கிறார் மற்ற மூன்று பேரும் இறக்கிறார்கள் . அரசியலில் வளர்ந்து வரும் வடிவேல் மாவட்டசெயலாளர் அழகம்பெருமாளிடம் அடித்தவர்களை தண்டிக்க சொல்ல தண்டித்தால் பெரிய சாதிக்காரர்களின் ஓட்டு நமக்கு கிடைக்காது என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவைக்கிறார் .பதினைந்து வருடங்கள் கடந்தும் உதயநிதி பத்து வருடம் ரிசர்வ் தொகுதி எம் எல் ஏ வாக இருக்கும் அப்பா வடிவேலுவிடம் பேசாமலும் வெளியே தான் எம் எல் ஏ மகன் என்றும் சொல்லாமல் வளர்கிறார்.
தன் காலேஜ் மெட் கீர்த்தி சுரேஷின் இலவச கோச்சிங் சென்டரை அழகம் பெருமாள் மகன் பகத்பாசிலின் அண்ணன் அடித்து நொறுக்க பதிலுக்கு உதயநிதி மற்றும் கீர்த்திசுரேஷ் நண்பர்கள் அவர்கள் இடங்களை அடித்து நொறுக்குகிறார்கள்,பிரச்சனை இப்போ பெரிதாக நேரடியாகவே வடிவேல் குடும்பத்திற்கும்,பகத்பாசில் குரூப்பிற்கும் மோதலாக உருவாகிறது வடிவேல் சட்டத்தை நம்ப பகத்பாசில் சாதியை நம்ப இறுதியில் யார் வெற்றியடைகிறார்கள் என்பது தான் முடிவே மாமன்னன் சட்டத்தை நம்பும் மனிதன்