பொம்மை -சீனா பொம்மையா ? திரைவிமர்சனம்

பொம்மை -சீனா பொம்மையா ? திரைவிமர்சனம்
இளநீர் போல மென்மையாக இருந்த இயக்குனர் ராதாமோகனின் சிந்தனை சுடு நீர் ஆனது .
முதல் பட இயக்குனர்கள் மட்டுமே வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியில் வித்தியாசமாக கதை சொல்கிறேன் என்று ஹீரோ ,ஹீரோயின் காதை ,நாக்கை ,மூக்கை ,அறுத்து ,,,கண்ணை குருடாக்கி என படம் எடுப்பார்கள் ,
ஆனால் பொம்மையை வைத்து ரசிகனை கொடுமை செய்ய வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன்? வந்தது அதுவும் டைட் குளோஸ் அப்பில் எஸ் .ஜே .சூர்யாவின் அழுகையை 70mm ல் பார்க்க முடியுமா???
நீங்கள் இருவருமே யதார்த்த இயக்குனர்கள் எந்த நம்பிக்கையில் அவர் நடிக்க நீங்க இயக்கனீ ங்க .

பொம்மை:- கதை என்னானு நாமும் சொல்லிடுவோம் -ஸ்கூல் வயசுல தொலைஞ்சு போன நண்பி யின் கன்னத்தில் இருக்கும் தழும்பு போல வளர்ந்து ஓவியராக இருக்கும் எஸ் ஜே சூர்யா விடம் ஒரு பொம்மை கிடைக்கிறது .இவர் மன பிரச்சனையால் அந்த பொம்மை பிரியாபவானிசங்கராக மாறி இவரிடம் காதல் கொ(ல்)கிறது .இந்த காதலை பைத்தியம் பிடிக்காதவர்கள் பார்த்தால் என்ன நடக்குமோ அது தான் இந்த படத்தின் மொத்த காட்சிகளும் .இந்த படத்தை நம்ம பொம்மைனு ஏத்துக்கவும் முடியல ,சீனா பொம்மைன்னு ஒதுக்கவும் முடியல .

About Author