பிச்சைக்காரன்2,,கெட்டிக்காரனா??? திரைவிமர்சனம்

பிச்சைக்காரன்2,-
கெட்டிக்காரனா??? திரைவிமர்சனம் …
இந்தியாவில் பணக்கார சாமியான திருப்பதி யிலும் ,அம்பானி ,அதானி போற ரோட்டுலயும் பிச்சைகாரங்க இருக்கும் போது அவங்களுக்கு,வராத மனசு பிச்சைகாரங்கள்ள ஒருத்தரான விஜய்ஆண்டனிக்கு வந்து பிச்சைகாரங்களே இல்லாத மக்களை உருவாக்க முயற்சிப்பது வரவேற்க கூடியது .
பாடகி லதாமங்கேஸ்வர் கடைசி காலத்தில் சொன்னது ,என் குரலை கேட்பவர்களுக்கு சொர்க்கத்தில் இருப்பது போல இருக்கும் ,நான் வாங்காத விருதுகள் இல்லை ,போகாத நாடுகள் இல்லை நிஜமாக நான் சொர்க்கத்தில் வாழ்ந்தேன் .ஆனால் இப்போது என் கடைசி நாட்களில் நான் மட்டுமே,என்னோடு எதுவும் வர போவதில்லை ,ஆகவே வாழும் போது இல்லாதவர்களுக்கு கொடுப்போம் .
ஹீரோவாக டைரக்சன் உட்பட அனைத்து வேலைகளையும் அவரே செய்திருக்கும் படம்.ஒளிப்பதிவு ஓம் நாராயணன் ..அப்பா அம்மா இறந்தபிறகு அனாதையாக பிச்சை எடுக்கும் விஜய்ஆண்டனியும் அவர் தங்கச்சியையும் சிலர் ,ஏமாற்றி பிரிக்கிறார்கள் . தங்கச்சியை பிரித்து விற்றவர்களை விஜய்ஆண்டனி கொலை செய்ததால் சிறுவர் சீர் திருத்தப் பள்ளிக்கு அனுப்ப படுகிறார் .10 வருடங்களுக்குப் பிறகு வெளியே வந்து விஜய்ஆண்டனி தங்கச்சியை தேடும்போது , ஒரு லட்சம் கோடிக்கு சொந்தமான தொழில் அதிபரான இவரை போலவே தோற்றம் உடைய இன்னொரு விஜய்ஆண்டனியை கொலை செய்து ,மூளையை எடுத்து பிச்சைக்கார விஜய் ஆண்டனி தலைக்குள் வைக்கின்றனர் .சொத்துக்காக தேவ்கில் ,ஜான்விஜய் ,என வில்லன் குரூப் பிச்சைக்கார விஜய்ஆண்டனியை கோடீஸ்வர விஜய்ஆண்டனியாக மாற்றி,சொத்தை அபகரிக்க மிரட்டும் போது விஜய் ஆண்டனி என்ன முடிவு எடுக்கிறார் என்பது தான் மீதி கதையே ,இதன் பிறகு தான் படத்தின் பலமும் இயக்குனராக விஜய் ஆண்டனியையும் உணரமுடிகிறது .இந்த கதைக்கு யோகிபாபு ,ராதாரவி ,மன்சூர் அலிகான் போன்ற நடிகர்கள் கமர்சியலுக்காக கூட தேவை இல்லை .
கிளைமாக்ஸில் தான் தேடிய தன் தங்கையை,கணவரோடு பார்த்த பிறகு தங்கையின் மகளாக சின்ன வயதில் பிரிந்து போன தங்கையை காட்டி இருக்கும் அந்த இடத்தில் இயக்குனராக விஜய் ஆண்டனி அசத்தி இருக்கிறார்
படத்தின் முதல்பாதி ரொம்பவே தொய்வு ,மிகைப்படுத்த பட்ட நடிப்பு இதை எல்லாம் சரி செய்திருக்கலாம் . .

About Author