பருந்தாகுது ஊர்க்குருவி திரைவிமர்சனம்:-பருந்தான ஊர்க்குருவி காக்கைக்கு விருந்தான கதை

பருந்தாகுது ஊர்க்குருவி திரைவிமர்சனம்:-பருந்தான ஊர்க்குருவி காக்கைக்கு விருந்தான கதை
பருந்தான ஊர்க்குருவி காக்கைக்கு விருந்தான கதையை
இந்த படத்தின் மேக்கிங் நினைவு படுத்துது
வழக்கமான கதை ,அடர்ந்த மலை பிரதேசம் ,ஏதோ ஒரு சின்ன விறு விறுப்பு கழுகு போல பலமாக முதல் பாதியில் இருந்தது ,
படத்தின் தொடர் காட்சிகளும்,நடிகர்களின் கத்துக்குட்டி நடிப்பும் வசனமும் ,தொய்வும் ,படத்தை காக்கைக்கு விருந்தாக்கி விட்டது போல அமைந்து விட்டது .கைதி படம் கார்த்தி போல் லுங்கி கட்டிக்கொண்டு எகத்தாளமாக இருக்கும் ஹீரோ நிசாந்த்ரூசோ,அடிவாங்கி உயிருக்கு போராடும் நரேன் போல விவேக்பிரசன்னா,
கொடி படம் த்ரிஷா போல காஸ்டியூம் லுக்கில் ,வில்ல குணம் கொண்ட ஹீரோயினாக வரும் ஹீரோயின்காயத்ரி அய்யர் ,ஆரம்பத்தில் பிடித்தாலும் வளர்ந்த பிறகு கணவன் விவேக் பிரசன்னாவை ஒதுக்குகிறார் ஹீரோயின் இப்போ உங்களுக்கு புரிந்திருக்கும் விவேக் பிரசன்னாவை யார் கொலை செய்ய முயற்சித்திருப்பார்கள் ,அவரை ஹீரோ காப்பாற்றினாரா இல்லையா என்பது .
போதிய லைட் இல்லாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் , இயக்குனர் கோ .தனபாலனின் தடுமாற்றமான திரைக்கதை ,சரியாக நடிகர்களை நடிக்கவைக்காதது என பருந்து காக்கைக்கு இரையாகி விட்டது .இருந்தாலும் ரஞ்சித் உன்னியின் இசை இடி முழக்கம் மட்டுமே ரசனை