பம்பர் – நேர்மைக்கு கிடைக்குமா ???திரைவிமர்சனம் …

பம்பர் – நேர்மைக்கு கிடைக்குமா ???திரைவிமர்சனம் …
அரிச்சந்திரன் உண்மைக்காக தன் மகன் ,மனைவி ,நாடு ,மணிமுடி என அனைத்தையும் இழந்தது போல ,இந்த படத்தில் ஹரிஷ் பேராடி நேர்மைக்காக எல்லாத்தையும் இழக்க அந்த நேர்மை அவர் குடும்பத்தை காப்பாற்றியதா என்பது தான் இந்த படத்தின் மையமே .
இந்த படத்தில் இஸ்மாயில் என்கிற பெயரில் கேரளாவில் லாட்டரி விற்பவராக வரும் ஹரிஷ் பேராடி எந்த கடுமையான சூழலிலும் தன் நேர்மையான குணத்தில் இருந்து ஊசி முனை அளவாவது தவறி விடுவாரா என்ற பதட்டம் தான் படத்தை விறு விறுப்பாக்கியிருக்கு வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்க வைக்கிறது .
இன்னொரு முக்கியமான
கேள்வி — இந்த படத்தில் ஹரிஷ் பேராடி நேர்மையாகா இருக்கவேண்டும் என படம் பார்க்கும் அனைவரும் உறுதியாக,ஆசையாக இருக்கும் போது ,நிஜ வாழ்க்கையில் பணத்திற்காக கொலை ,கொள்ளை ,லஞ்சம் எப்படி அதிகரிக்கிறது ஆசை என்பது வேறு,வாழ்க்கை என்பது வேறா ?இந்த முரண்பாடு நம்மில் விலக வேண்டும் .
படத்தின் காட்சிகளிலும் ,காட்சி உருவாக்கத்திலும் ,கவனம் செலுத்தி இருந்தால் படம் மேலும் கவனிக்கபட்டிருக்கும் .
இந்த படத்தோட கதை — தூத்துக்குடியில் ஹீரோ வெற்றி அவரின் இரண்டு நண்பர்களும் தர லோக்கல் திருடர்கள் ,கேவலமானவர்கள் .போலீஸ் எஸ் பி யிடம் இருந்து தப்பிக்க சபரிமலைக்கு மாலை போடுகிறார்கள் .சபரிமலையில் ஹீரோ லாட்டரி வியாபாரி ஹரிஷ் பேராடி யிடம் பத்து கோடி தீபாவளி பம்பர் லாட்டரி வாங்கி அங்கேயே தவறி விட அதை ஹரிஷ் பேராடி எடுத்து வைக்கிறார் .அந்த லாட்டரிக்கு பத்து கோடி கிடைக்கிறது .அந்த லாட்டரியை தன் பெயருக்கு மாற்றி கொள்ளாமல் கேரளாவில் இருந்து பல சிரமங்களுக்கு இடையே தூத்துக்குடி வந்து ஹீரோவை கண்டுபிடித்து கேரளா கூட்டி சென்று தன் அக்கவுண்டில் பணத்தை போட்டு , ஊசி முனை அளவும் நேர்மையில் இருந்து விலகாமல் ஹீரோவிற்கு ஹரிஷ் பேராடி பணத்தை எடுத்து தருகிறார் .இதற்கு இடையே பணத்திற்காக ஹீரோ நண்பர்களின் குடும்பம் ,ஹரிஷ் பேராடி குடும்பம் ,அவரின் மகன் என அனைவரும் நரி ,நாய் ,பேய் குணத்தோடு அலைவது பயம் .இந்த நாய் நரி குணமுள்ளவர்களை மீண்டும் மனிதன் ஆக்குவது நேர்மை மட்டுமே .இது தான் படத்தின் முடிவும் ..