பனாரஸ்- திரைகண்ணோட்டம்

பத்து வருடங்களுக்கு முன் சர்வ பலம் பொருந்திய திருச்சி ராமஜெயம் (அமைச்சர் கே .என் .நேரு அவர்களின் தம்பி) கொலை செய்யப்பட்டதை பல பெரும் முயற்சிகளுக்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு முன் 12 சந்தேகப்படும் நபர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட அனுமதிவழங்கப்பட்டது .இதற்கும் இந்த படத்தோட கதைக்கும் என்ன தொடர்ப்புனா? இந்த உண்மைகண்டறியும் சோதனையை அச்சுக்குமார் தன் அண்ணன் மகள் ஹீரோயின்சோனல் மன்டேரியோவை காதலிக்கும் சயீத்திகான் ஹீரோவிற்கு (ஊசி மூலமாக )தெரியாமலே ஹீரோயின் மூலமாக நடத்தி காதலின் உண்மையை கண்டறிந்து ,தொடர்ந்து காதலர்கள் சேர்வது தான் கதையே .முதல் முறையாக காதலுக்கு இந்த புதிய விஞானத்தை பயன்படுத்தியிருக்கறாரு இயக்குனர் ஜெயதீரா. இந்த படத்தோட கதை -ஹீரோ விளையாட்டாக ஹீரோயினிடம் டைம் ட்ராவல் எனபொய் சொல்லி அவர் பெட் ரூமிற்கே சென்று தூங்கி கொண்டு இருக்கும் போது செல்பி எடுத்து சோசியல் மீடியாவில் போடறாரு .இதனால் அவமானப் பட்ட ஹீரோயின் பனாரஸ் போயிடறாங்க பனாரஸ் போன ஹீரோ மன்னிப்பு கேட்டு ஹீரோயின் பின்னாடி அலைகிறார் .அப்போது சில கேரக்டர்ஸ் மூலமாக வாழ்கையின் உண்மைகளை உணர்த்தி இருக்காங்க