நட்சத்திரம் நகர்கிறது — மினி திரை ஆய்வு

காதல் இன்றைய பாலினத்தவர்களுக்கு எப்படி வருகிறது ,எதனால் வருகிறது ,எதை பேசினால் அவர்களுக்குள்  ஊடல் வருகிறது ,இவர்கள் காதலில் யாரால் சுதந்திரமாக முடிவு எடுக்கமுடிக்கறது ,இவர்களின் பெற்றோர்கள் எப்படி இவர்கள் காதலை அனுகுகின்றனர் ,சமுதாயம் இவர்கள் காதலை  எப்படி புரிந்து கொள்கிறது என்பதை அதிகம் பீல் பன்னக்கூடிய நடிப்பு கலைஞர்களை வைத்து சொல்லி இருக்கிறார்

பா .ரஞ்சித்

திரௌபதி படத்தை நல்ல படம் என்றும் நட்சத்திரம் நகர்கிறது படத்தை சரியில்லை என்று சொல்லுபவர்கள் ரசிகர்களாக இருந்தால் அவர்கள் ஆவண  கொலையை ஆதரிக்கிறவர்கள் சாதி பாகுபாட்டை  ஆதரிக்கிறவர்கள்  என்று யோசிக்காமல் சொல்லலாம்

ஏன் என்றால் காதலை பெற்றோர்கள்  இரண்டு காரணுங்களுக்காக எதிர்ப்பார்கள் ஒன்று ஸ்டேட்டஸ் ,இரண்டு சாதி ,சாதியால் வரும் எதிர்ப்பில் தான் காதலர்கள் பெற்றோர்களால் கொல்லப்படுகின்றனர்,இதை இந்தப்படத்தில் காட்சிகளுக்கு இடையே ஒரிஜினல் விசுவலாக இயக்குனர் காட்டி இருக்கிறார்

.பல ஆண்டுகளாக இருந்தாலும் சொல்லாமல் இருந்த ,திரையில் கேவலமாக சொன்ன ஆண் ,பெண்,இரண்டாம் பாலினத்தவர் ,ஒரே பாலினத்தவர்  இவர்களுக்குள் வரும் காதல் ,அவர்களுக்கான சுதந்திரத்தை நாகரீகமாக காட்சி வைத்திருப்பார் இயக்குனர் பா .ரஞ்சித் 

இயக்குனர் கே .பாலசந்தர் அரங்கேற்றம் படத்தில்  ஒரு பெரிய ஆச்சாரமான பெண் ஒருத்தி தன் குடும்பத்தை காக்க  விபசாரத்தில் ஈடுபடுவாள்  அதற்கான நியாயத்தை காட்சிக்கு காட்சி சொல்லியிருப்பார் அப்போது எதிர்த்தார்களா ,ஆதரித்தார்களா என்று தெரியவில்லை இப்போது இந்தப்படத்தை எதிர்ப்பவர்கள் ,இந்த படத்தில் காட்டப்பட்ட  புறக்கணிக்கப்பட்டவர்களின் வலிகளை உணருங்கள் அவர்களும்  நம்மோடு நண்பர்களாக ,மனிதர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணருங்கள் 

About Author