தெய்வமச்சான் திரைவிமர்சனம்-ஆண்பாவம்,களவாணி பார்த்து சூடு போட்ட பழையபாணி

தெய்வமச்சான் திரைவிமர்சனம் -ஆண்பாவம்,களவாணி பார்த்து சூடு போட்ட பழையபாணி
சின்ன சின்னதா சிரிப்பு, சின்ன சின்னதா வெறுப்பு ஆனா பெருசா எங்கேயும் போர் அடிக்கல ,திட்ட வைக்கலே.இந்த கதைய சுந்தர் சி ,பொன்ராம் இயக்கி இருந்தா கலகலப்பு ,ரஜினிமுருகன் படங்கள் மாதிரி பல முறை டி வி சேனல்கள்ல போடக்கூடிய நகைச்சுவை வெற்றி படமா உருவாகி இருக்கும் .
விமல் தன் தங்கச்சி அனிதா சம்பத்தை பெண் பார்க்க வந்த கிழட்டு பண்ணையார்களான நரேனையும் அவர் தம்பியையும் விரட்டி அடிக்கிறார் .கோவமான அவர்கள் அனிதாவுக்கு ஓகே வான மாப்பிள்ளையோடு கல்யாணம் நடக்க இருப்பதை தடுக்க முயற்சி செய்கிறார்கள் ,இதோடு விமல் கனவில் குதிரையில் வந்து குறி சொல்லும் கோடங்கி விமல் தங்கச்சிக்கு கல்யாணம் ஆன இரண்டு நாள்ள புருசனோட மச்சான் செத்துடுவார்னு சொல்லி மறையறாரு ,கோடங்கி விமல் கனவில் வந்து சொன்னவர்கள் எல்லோரும் இறந்த தால் பயந்து போன விமல் பயமும் காமெடியும் கலந்து கலாட்டா செய்து தன் தங்கச்சி கல்யாணத்தை எப்படி நடத்தறாரு ,யாரு சாகறாங்க என்பது தான் படத்தோட முடிவே .
எரிச்சல் தரக்கூடிய தீபாசங்கர்,அவர் புருஷன் ,பண்ணையாரின் இரண்டு உளவாளிகள் என தேவையில்லாத நடிகர்களை நீக்கி இருக்கலாம் ஒரு நல்ல காமெடி படத்திற்கு இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் முயற்சி செஞ்சி முடியாம போயிருக்கு .