துணிவு – திரைவிமர்சனம்

துணிவு – திரைவிமர்சனம்
ஒரு நல்ல கேள்வியே இந்த படத்தை வெற்றியடைய வைத்திருக்கு கொள்ளைக்காரன் அஜீத் போலீஸ் கமிஷனர் சமுத்திரக்கனி யை பார்த்து தன்னுடைய 5லட்சம் வாடிக்கையாளர்களின் பணம் 25ஆயிரம் கோடியை ஏமாற்றி தன்னுடைய பாங்கிலேயே பதுக்கி வைத்து ,அதை திருடிவிட்டு பேங்கை கொழுத்த திட்டம் போட்ட இந்த பேங்க் ஓனர் கொள்ளையனா? ,கொள்ளையனாக இருந்தாலும் இந்த உண்மையை காட்டி 25ஆயிரம் கோடியை மக்களுக்கே கொடுக்க வைத்த நான் கொள்ளையனா? என்று கேட்டுவிட்டு இந்தியன் தாத்தா மாதிரி துணிவு2 விற்கு லீட் கொடுத்து விட்டு மறைகிறார் .பேங்கில் அஜீத் குழு,வீராகுழு , பிரேம் குழு என மூன்று குழு கொள்ளை அடிக்க முயற்சி செய்ய ,அஜீத்தால் மட்டுமே கொள்ளை அடிக்க முடியுது அவர் தன்னையும் தன்னோடு இருக்கும் மஞ்சுவாரியாரையும் காப்பாற்றிய ஏழை பெற்றோரின் மகன் இந்த பேங்கால் கொல்லப்படுகிறார்,இந்த பேங்கின் பித்தலாட்டத்தை அஜீத் வெளி கொண்டுவரவே இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார் .இயக்குனர் ஹச் .வினோத் முதல் பாதியை மெதுவாக நகர்த்தினாலும் ,இரண்டாம் பாதியை மக்களுக்கான படமாக விறு விறுபாக்கியிருக்கார்.தொலைக்காட்சி ரிப்போர்ட்டராக வரும் அறிமுக நடிகர் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் நடிப்பில் பல இடங்களில் கைதட்ட வைக்கிறார்