தீராக் காதல்-அன்பா?அபத்தமா? திரைவிமர்சனம்

தீராக் காதல் – அன்பா ? அபத்தமா ? திரை விமர்சனம்–
கொடைக்கானல் குளிராக உணரவேண்டிய காதலை கோடை வெப்பமான காதலாக மாற்றிய இயக்குனர்
ரோகின்வெங்கடேசன் மற்றும் அதற்கு காரணமானவர்களை நேர்மையான காதல் மன்னிக்காது .படத்தின் முதல் பதினைந்து நிமிடத்தில் ஜெய் ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,சந்திப்புகளும் அதற்கான சூழல்களும் படமாக்கிய விதமும் படம் பார்க்கும் நம்மையும் அதுபோல ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட வைக்கும் .
அதன் பிறகு ஐஸ்வர்யா காதல் என்கிற பெயரில் செய்யும் செயலும் ,அதற்கு ஜெய்யின் ரியாக்சனும் எங்கே காதல் படம் கள்ளக்காதல் படமாக பரிணமித்து விடுமோ என்ற பயம் தோன்றுகிறது .நல்ல வேலையாக ஜெய்யின் மனைவி ஷிவதா ,அவர்களின் மகள் இந்த பயத்தை மாற்றி காதலுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள் .ஐஸ்வர்யா கணவனை பிரிந்து ஜெய் யை தேடி போகிறார் என்பதை நியாயப் படுத்த ஐஸ்வர்யாவின் கணவர் அம்ஜத்கானை (விஜய் படத்து) வில்லன் ரேஞ்சுக்கு கொடியவனாக காட்டி பழைய காலத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
கதைய சின்னதா சொல்லனும்னா -ஜெய் ,ஐஸ்வர்யா கல்லூரி காதலர்கள் ,வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்ய ஐஸ்வர்யா ஒத்து கொள்ளாததால் ஜெய்- ஷிவதா,அம்ஜத்கான்- ஐஸ்வர்யா கணவன் மனைவி ஆகிறார்கள் .ஏழு வருடங்களுக்குப் பிறகு ஜெய் ஐஸ்வர்யா இருவரும் சந்திக்கிறார்கள் மீண்டும் பழகுகிறார்கள் ,கணவனோடு பெரும் சண்டையில் இருக்கும் ஐஸ்வர்யா விற்கு இந்த பழக்கம் பிடித்து விட கணவனை விட்டு பிரிந்து ஜெய் குடும்பத்தோடு குடியிருக்கும் போர்ட்சனுக்கு எதிர் போர்சனுக்கே வந்து விடுகிறார் அதன் பின் நடக்கும் நாடகமே இந்த படத்தின் முடிவு .பிற்போக்கான சிந்தனை படத்தை பின்னுக்கு தள்ளிவிடுகிறது .