திருவின் குரல் -திரைவிமர்சனம் அருமையா ,வெறுமையா ,

திருவின் குரல் -திரைவிமர்சனம் அருமையா ,வெறுமையா ,
ஹீரோ அருள்நிதி அப்பா பாரதிராஜா வேலை செய்யும் இடத்தில சிமெண்ட் மூட்டை அவர் மீது விழ அருள்நிதி அரசு மருத்துவ மனையில் சேர்கிறார் அங்கு நோயாளிகளின் கூட்டமும் சிலரை தவிர அங்கு வேலை செய்யும் டாக்டர்கள் ,நர்ஸ்கள் ,வார்டுகளில் ,லிப்டில் வேலை செய்பவர்களின் அலட்சியத்தை நேரடியாகவும் ,சினிமாக்களிலும் பார்த்திருக்கிறோம் .ஆனால் நாம் பார்க்காதது அவர்களே கொடூரமான கொலை ,கொள்ளை காரர்களாகவும் இருந்து கொலை செய்யப்பட்ட பிணத்தை மறைத்து வைக்கும் இடமாக மார்ச்சுவரியை பயன்படுத்துகிரறார்கள் என்பதும் தான் .
இந்த கொலைகார கும்பலிடம் அப்பா பாரதிராஜா ,அருள்நிதி ,அவர் கட்டிக்க போகும் முறை பெண் ஹீரோயின் ஆத்மிகா அருள்நிதி அக்கா சுபத்ரா அவர் சின்னவயது மகள் என குடும்பமே சிக்கிக்கொள்கிறது .வாய்பேச முடியாத கிட்ட பேசினால் மட்டுமே காது கேட்கும் குறையுள்ள அருள்நிதி எப்படி இந்த சிக்கலை உடைத்து வில்லன்களை அழித்து குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் கதையே .
அருள்நிதி நன்றாக ரசிக்கும் படி அழுது நடித்திருக்கிறார் ,சண்டை போடுகிறார்,நாகரீகமாக ரசனையோடு காதலிக்கிறர் .வில்லன்களில் லிப்ட் ஆப்ரேட்டர் அஷ்ரப் பயங்கர டெர்ரர் ,இந்த படம் பார்த்தால் அரசு மருத்துவ மனையின் மேல் பயம் வரும் குறிப்பாக லிப்ட்டில் ஏறவே மாட்டார்கள்.கொலைகாட்சிகளில் அதிகமான கொடூரத்தை இயக்குனர் ஹரிஷ் பிரபு தவிர்த்து இருக்கலாம் ,நிறைய இடத்தில லாஜிக்கே இல்லாமல் இருப்பதும் பின்னடைவு.கொடூரத்தை அதிகம் நம்பாமல் யதார்த்தத்தை நம்பியிருக்கலாம் மொத்தத்தில் படத்தின் முதல் பாதி அருமை இரண்டாம் பாதி வெறுமை ,