தக் லைப் – திரை விமர்சனம் –

தக் லைப் – திரை விமர்சனம் –
பருப்பு வடைய வாங்கி பார்த்தா அதுல பருப்பே இல்ல அப்ப அந்த வடைக்கு பெயர் என்ன? யோசிங்க …இதை படிங்க
கதையே இல்லாமல் கேங்ஸ்டர்ஸ் இடையே நடக்கும் துப்பாக்கி சண்டை ,ஒருவரை ஒருவர் நம்பாமல் ,காட்டிக்கொடுப்பது இரண்டு பெண்களோடு வாழ்வதின் சுகம் துக்கம் ,மேக்கிங் இதை வைத்து மணிரத்னம் எடுத்த படம் தான் இது .
கமல் கேங்கில் நாசர் , மஹேஷ்மஞ்சுரேகர் ,ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் இருக்க தங்கள் தங்கி இருக்கும் இடத்தை மஹேஷ்மஞ்சுரேகர் போலீஸ்க்கு காட்டி கொடுக்க துப்பாக்கி சண்டை நடக்குது .இதில் பேப்பர் போடும் சிறுவன் சிம்புவின் அப்பா இறக்க அனாதையான சிம்புவை வளர்த்து தனக்கு அடுத்த இடத்தில் உட்க்காரவைக்கிறார் கமல் .
இதனால் நாசர் உட்பட எல்லோரும் பொறாமை அடைகிறார்கள் .இதனால் கமலிடம் இருந்து ஏற்கனவே பிரிந்து சென்று அசுர வளர்ச்சி கொண்ட மஹேஷ்மஞ்சுரேகர் டீம் ,மற்றும் கமல் மகன் போல வளர்த்த சிம்பு ,மற்றும் நாசர் டீம் செய்த சதி செயலை கமல் தன் மனைவி அபிராமி மற்றும் குடும்பத்தோடு எப்படி எதிர்கொண்டு அழிக்கிறார் என்பதும் .
அசோக்செல்வன் ,ஐஸ்வர்யா லட்சுமி ,திரிஷா இவர்கள் என்ன இந்த படத்தில் செய்தார்கள் என்ப்பதும் தான் இந்தப்படதோட மீதி கதையே.