தக்ஸ்- திரைப்பட விமர்சனம்

தக்ஸ்- திரைப்படவிமர்சனம்
நடன இயக்குனர் பிருந்தா இயக்கியிருக்கும் படம்.அறிமுக ஹீரோ கிருதுஹாரூன் ,பாபிசிம்ஹா,முனீஸ்காந்த்,மற்றும் சிலர் ஜெயிலில் சுரங்கம் தோண்டி ஜெயில் சூப்பிரண்டன்ட் ஆர் .கே .சுரேஷ் டீமை ஏமாற்றி தப்பித்து போகிறார்கள் .இந்த இரண்டு வரி கதையை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சினிமாவாக எடுத்த இந்த படத்தின் ஆர்டிஸ்ட்கள் ,படைப்பாளிகள் தைரியத்தை பாராட்டலாம் .ஆனால் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு தைரியம் வேண்டும்.லாஜிக்கே இல்லாமல் ,ரசனையும் இல்லாமல், லவ்டுடே போல நூறு நாள் ஓடக்கூடிய படம் என்ற துள்ளலோடு இந்தபட ஹீரோ மட்டும் உழைத்திருக்கிறார் ,நடித்திருக்கிறார்.பெரிய வெற்றிப்பட இயக்குநர்களோடு ,கேமராமேன்களோடு மாஸ்டர் பிருந்தா பணிபுரிந்திருக்கலாம் ,ஆனால் பிலிம் மேக்கிங் என்பது வேறு என்பதை புரிந்து கொண்டிருந்தால் இந்த படம் எடுத்த தயாரிப்பாளர் ரியாசிபு ,படம் பார்த்தவர்கள் தப்பித்து இருப்பார்கள்.சாம் சி .எஸ் இனிமேல் காதுக்கிட்டேயே வந்து வாசிக்காதப்பா ரொம்ப எரச்சலா இருக்கு .