டைரி – திரைவிமர்சனம்

அம்மானுஷ சக்தியை மையமாக வைத்து டிமாண்ட்டி காலனி படத்திற்குப் பிறகு ஹீரோ அருள்நிதிக்கு வெற்றியை தந்தப்படம் போலீஸ் டிரைனிங்ல் சப் இன்ஸ்பெக்டராக பயிற்சி முடித்து அருள்நிதி ஊட்டியில் 13 வது கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி ஏற்படும் சந்தேகத்திற்கு இடமான விபத்தை கண்டுபிடிக்கும் அசைன்மெண்டோடு ஊட்டிக்கு வருகிறார் .
அங்கு ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் பார்வதி மாரிமுத்து உதவியோடு இன்வெஸ்டிகேஷனை தொடங்குகிறார் .இரவு நேரத்தில் ஊட்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பஸ் கிளம்புது அதில் நகைகளை கொள்ளை அடித்த கும்பல் , 200 பவுன் நகையோடு ஊட்டி எம் எல் ஏ ஜேபி மகள் தன் காதலனோடு,கார் திருடன் தணிகை ,சாரா ,மற்றும் ஒரு குடும்பம் காலேஜ் பெண் என பயணிக்கின்றனர்
நகை கொள்ளையர்கள் எம் எல் ஏ மகளின் நகையை கொள்ளை அடிக்கும் போது அருள்நிதி அவர்களை அடித்து பஸ்சில் கட்டிவைக்கிறார் ,ஆனால் பஸ்சிற்குள் அருள்நிதி ,சாரா ,கல்லூரி மாணவிக்குமட்டும் அம்மானுஷியா உருவம் தென்படுகிறது .உடனே இந்த பஸ் பற்றி பார்வதியிடம் அருள் கேட்க பார்வதி பஸ் கிளம்பிய டெப்போவில் விசாரிக்கும் போது அருள்நிதி பயணிக்கும் பஸ் காணாமல் போய் 16 ஆண்டுகள் ஆகுது என்றும் அவரோடு பயணிப்பவர்கள்ம் இறந்து 16 ஆண்டுகள் ஆனது என்றும் சொல்ல அதிர்ச்சி அடையும் அருள்நிதி எடுக்கும் முடிவு என்ன என்பது மீதி பயம் படம்
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் தரமாக பிரமாண்டமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறரர் அரவிந்த் சிங்,ரோன் எதன் யோகன் இசையும் சர்வதேச தரம் ஒரு நல்ல டீமோடு திரில் வெற்றியை தந்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் இன்னாசிப்பாண்டியன் .கதிரேசன் தயரிக்க ,ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்டு இருக்காங்க .