டிரைவர் ஜமுனா -திரைவிமர்சனம்

டிரைவர் ஜமுனா -திரைவிமர்சனம்
கிளைமாக்ஸில் ஒரு திருப்பமான காட்சியை நம்பி 90 நிமிட முழு படத்தையும் எடுத்திருக்கறாரு இயக்குனர் கிங்ஸ்லின் ,முழுப்படத்தையும் ஐஸ்வர்யாராஜேசின் நடிப்பு தூக்கி பிடித்தாலும் ,மற்ற நடிகர்களின் நடிப்பும் ,திடம் இல்லாத காட்சிகளும் படத்தை கீழே தள்ளுகிறது .
தன் அப்பாவை கொன்ற ரவுடி குழுவை காரில் ஏற்றிக்கொண்டு ,இதற்கு காரணமான EX MLA நரேனை தன் தம்பியோடு சேர்ந்து கொன்று பழி தீர்ப்பார் ஐஸ்வர்யா இது தான் கதையே .
ரவுடி குழுவில் ஐஸ்வர்யா தம்பி இருப்பது அவர்களுக்கு தெரியாது கிளைமாக்க்சில் தான் ரசிகர்களுக்கு தெரியும் ,நரேன் சொல்லி தான் ஐஸ்வர்யா அப்பாவை கொன்றோம் என்று ரவுடிக்குழுவிற்கு தெரியாது ,நரேனுக்கும் இந்த ரவுடி குழுவை தெரியாது ,தான் கொலை செய்தவரின் மகள் தான் ஐஸ்வர்யா என்று கிளைமாக்ஸில் தான் நரேனுக்கும் ரசிகர்களுக்கும் தெரியும் இது தான் திருப்பமே .

About Author