டக்கர் -மக்கரா ???மாஸா ???-திரைவிமர்சனம்

  • டக்கர் -மக்கரா ???மாஸா ???-திரைவிமர்சனம்
    பந்திக்கு கூப்பிட்டு பாயாசத்துக்கு பதில் பாகக்காய் சூப் கொடுத்த மாதிரி ஆகிடுச்சு.
    ரன் ,கில்லி ,பையா ,மாதிரி வந்திருக்க வேண்டிய படம் டக்கர் .
    ஹீரோயின் திவ்யஷாகௌசிக் கேரக்டரை மையப்படுத்தி கதை ட்ராவல் ஆவதும் ,காதலின் கடைசி நிலை காமம் ஆகவே காதல் என்று ஒன்று இல்லை என முடிவு செய்த ஹீரோயினுக்குள் வரும் மாற்றங்கள் என கதை வெற்றி படத்திற்கான பேஸ்மென்ட் ஸ்ட்ராங்கா இருந்தாலும் காட்சிகள் என்ற பில்டிங் வீக்கா இருக்கு .
    கதையை மட்டும் நம்பாம யோகிபாபு காமெடியினால படம் ஓடும்னு அவரை நடிக்க வச்சு மொத்த படத்தையும் யோகிபாபு காமெடி என்கிற பெயர்ல காலி பண்ணிட்டாரு ,பவர்புல் வில்லனை யோகிபாபுவுடன் நடிக்க வச்சு பதற விட்டுடாரு இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ்
    கதை :-சித்தார்த் டாக்சி டிரைவர் பயந்த சுபாவம் உடையவர் ஆனால் பலமானவர் .ஹீரோயின் திவ்யஷாகௌசிக் எந்த நட்பு ,உறவின் மீதும் பிடிப்பு இல்லாமல் சுதந்திரமாக இருப்பவர் .இவரின் அப்பா பணத்திற்காக தன் பாட்னரை கல்யாணம் செய்ய சொல்லி வற்புறுத்த ஹீரோயின் மறுக்கிறார் .ஹீரோயினை சில நேரங்களில் தன் காரில் ட்ராப் செய்ததால் அவர் மேல் காதல் கொண்ட சித்தார்த் அவரை காரில் பாலோ செய்ய கார் ஆக்சிடண்ட் ஆகிறது .
    ட்ராவல்ஸ் ஓனர் சித்தார்த்தை அடித்து அவமானப்படுத்தி சம்பளம் வாங்காமல் ஏழு வருடம் வேலை செய்ய ஒப்பந்தம் போட ,அவமான ஹீரோ பல தற்கொலை முயற்சி எடுத்தும் பயத்தால் முடியாமல் போகிறது.
    கடைசியாக ஒரு பெரிய டானை அடித்து அவன் கையால் சாகலாம் என்று அவனை அடிக்க ,அப்பவும் சாகாத சித்தார்த் யதேச்சையாக வந்த தைரியத்தால் வில்லன் காரில் தப்பிக்க அந்த காரில் ஏற்கனவே திவ்யஷாகௌசிக் ஹீரோயினும் இருக்க கொண்டாட்டத்தில் சித்தார்த் ரியல் ஹீரோ ஆகிறார் .
    பல வில்லன்களிடம் இருந்து ஹீரோயினை காப்பாற்றி சித்தார்த் அவர் மனதில் எப்படி காதலை உருவாக்குகிறார் என்பது தான் மீதி கதையே.இந்த கதைக்கு நண்பனாக வரும் விக்னேஷ்காந்த்,முனீஷ் காந்த்,மற்ற நடிகர்கள் யாரும் தேவைப்பட வில்லை என்றே சொல்லலாம்.படத்தின் டிசைனுக்கு எடுத்த முயற்சியை காட்சிகளுக்கு எடுத்திருந்தால் படம் மக்கர் இல்லாமல் மாஸாக இருந்திருக்கும் .

About Author