ஜெயிலர் -இஷ்டமா ,கஷ்டமா -திரைவிமர்சனம்

ஜெயிலர் -இஷ்டமா ,கஷ்டமா -திரைவிமர்சனம்

 

இந்த படத்தை பார்த்திட்டு நல்லா இருக்குனு சொல்லறவங்கள பார்த்தா எப்படி இருக்குன்னா கோலம் போடதெரியாதவன்கோடு போட்டு சந்தோச பட்ட மாதிரிஇருக்கு
2மணி 48நிமிடத்தில் இந்த சீன்ல டைரக்டர் நெல்சன் அசத்திட்டாருனு சொல்லறமாதிரி ஒரு சீன் கூட இல்லாத ஒரு ரஜினி படம் ,
ரஜினி என்கிற மூத்த ,அனுபவம் மிக்க நடிகர் நடித்ததால் இந்த மண்ணாங் கட்டி கதைஓரளவு சிற்பமாகியிருக்கு.
வில்லன் விநாயகன் தன்னோடு இருப்பவர்களை சம்பட்டியால் மண்டையில் அடித்து ஆசிட் ட்ரம்மிற்குள் மூழ்கடித்து கொல்வதும் ,பதிலுக்கு விநாயகன் ஆட்களை ரஜினி தன் வீட்டு டைனிங்க் டேபிள் முன் மனைவி ,மருமகளை உட்காரவைத்து ரத்த அருவியில் குளிக்க வைத்தது போல் வில்லன் ஆட்களை கொல்வது போன்ற நவீன செண்டிமென்ட் காட்சிகளை கருணையோடு தவிர்த்திருக்கலாம் .
காமெடி நடிகர்கள் நடிக்கும் காட்சியில் சிரிக்கவும் என்று சப் டைட்டில் போட்டிருந்தால் சிரித்திருக்கலாம்.
ஒரு பாடலோடு அனிருத் தன் இசை பணியை முடித்துக் கொண்டார் .
கதை என்னான்னா ரிட்டையர்டு ஜெயிலர் ரஜினி மகன் போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனர் வசந்த் ரவி ,சிலைகளை கடத்தும் வில்லன் விநாயகன் குழுவை பிடிக்க முயற்சிக்கும் போது காணாமல் போகிறார் ,மகன் மேல் அதிகம் பாசம் கொண்ட அப்பா ரஜினி மகனையும் சிலை கடத்தும் கும்பலையும் கண்டுபிடிப்பது தான் கதையே.மொத்தத்தில் இஷ்டமா கஷ்டப்படக்கூடியவங்க
ரசிகர்கள் மட்டுமே …

About Author