ஜிவி 2 திரைவிமர்சனம்

இந்த படத்தோட கதை 

ஊர்ல சொல்லுவாங்க இந்த கைல சாப்பிட்டுக்கிட்டே சோறு போட்டவங்கள குத்த இந்த கைல கத்தி வச்சிருப்பாங்கனு அது மாதிரி ஜீவி படத்துல ஹீரோ வெற்றி  அவர் நண்பன் கருணாகரன் ரெண்டு  பேரும் வீடு வாடகைக்கு கொடுத்த ரோகினி வீட்லேயே பணம்,ஜீவல்ஸ்  திருடுவாங்க அதனால் ரோகினி குடும்பத்திற்கு ஏற்படும் இழப்பு ஊர்ல இருக்கும் ஹீரோ குடும்பத்திற்கும் ஏற்படுது

 இத தெரிஞ்சு அதிர்ச்சி அடைந்த ஹீரோ இது தொடர்பியல்ன்னு கண்டுபிடிச்சு இதற்கு முற்று புள்ளி வைக்க மையப்புள்ளிய தேடுறாரு இது தான் ஜீவி படத்தின் கதை

 ஜீவி 2 வில் இந்த தொடர்பியல் முடிவுக்கு வரணும்னா ரோஹிணியோட பார்வை இழந்த பொண்னை கல்யாணம் செஞ்சிகராரு  கல்யாணம் செஞ்சி சந்தோசமா ஷேர் ஆட்டோ ஒட்டிக்கிட்டு இருக்கும் போது வழியில் கருணாகரனை பார்த்து அவருக்கு டீ கடை வச்சு கொடுக்கறாரு

,தன்னோட பொண்ட்டாட்டிக்கு கண் ஆபரேஷன் செய்ய எட்டு லட்சம் ரெடி பண்ணறாரு வெற்றி ,திடீர்னு தன் அக்கா பொண்ணுக்கு பார்வை போகுது ,ரோஹிணி தம்பி மைம் கோபியால கிடைக்க வேண்டிய எட்டு லட்சம் கிடைக்காம போகுது ,இதே வேளையில் வெற்றிக்கும் கருணாகரனுக்கும் பொதுவான பணக்கார நண்பன் கொலை செய்யப்படறாரு இவங்க போலீசால் சந்தேகத்திற்கு உட்படறாங்க.

எல்லாத்தையும் இழந்த ஹீரோ மீண்டும் வேலை தேடுற நிலைக்கு வர்றாரு தொடர்பியலின் மையப்புள்ளிய தேடும் ஹீரோ அதை கண்டறிந்து இழந்த வாழ்க்கையை மீண்டும் அடைந்தாரா இல்லையா என்பது தான் மீதிக் கதையே

ஹீரோ வெற்றி இவர் கதாபாத்திரம் எதையோ இழந்து,யோசித்துக் கொண்டிருப்பது போல உருவாக்கப் பட்டிருப்பதால் பெருசா போல்டா நடிக்க அவசியம் இல்லாம போகுது குரலை  நார்மல் லெவலுக்கு கீழே பேசி நடிச்சிருக்கறாரு கருணாகரன் ,பார்வை இழந்த அஸ்வினி இருவரின் நடிப்பும் ஹீரோ நடிப்பை விட தூக்கலாவே இருக்கு ,ஒளிப்பதிவு பிரவீன் குமார் டி .எந்த டிஸ்டர்ப்பும் செய்யாம காட்சிக்கு பொருத்தமா செஞ்சிருக்கார்றாரு ,சுந்தரமூர்த்தியின் இசை ஒருவித பீதியை ரசிகர்களுக்கு கொடுக்குது இயக்குனர் வி ஜே  கோபிநாத்  ஜீவி 2 வில் பெருசா தொடர்பியல் தியரிய சொல்லாம கேரக்டர் சேஷனுக்கான கனெக்ட்டிவிட்டியையும் பினிசிங்கேயும் தந்துருக்கறாரு

 தொடர்பியலுக்கும்  கோ இன்சிடெண்டுக்கும் சின்ன இடைவெளிதான் சிம்பு நடித்த வானம் ,மாநாடு ,வெங்கட் பிரபுவின் மங்காத்தா ,பிரியாணி  ஆர் சுந்தராஜனின் வைதேகி காத்திருந்தால் இது எல்லாமே கிட்ட தட்ட தொடர்பியல் மேக்கிங் தான் இன்னும் பச்சயா சொல்லனும்னா நல்லது செஞ்சா நல்லது நடக்கும் கெட்டது செஞ்சா கெட்டது நடக்கும் ஜீவி 2 நல்லதே நடக்க வாய்ப்பு இருக்கு

About Author