செம்பி திரைவிமர்சனம்

செம்பி -திரைவிமர்சனம்
,யதார்த்தமான வாழ்வியல் கதையில் அதிகமான சினிமா தனம் சேர்த்து,தேவை அறிந்து எடுத்த கதையை தேவை இல்லாத காட்சிகளால் படத்தை கலைந்து போன கோலமாக்கி விட்டார் இயக்குனர் பிரபுசாலமன் ,
கோவைசரளா தன் பேத்தி செம்பியோடு கொடைக்கானல் மலைப்பிரதேசத்தில் வாழறாங்க .ஒருநாள் பெரிய கட்சி தலைவர் நாஞ்சில் சம்பத் மகனும் நண்பர்களும் செம்பியை பாலியல் வன்கொடுமை செய்ய ,செம்பி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்து காப்பாற்ற படறாங்க இது வெளிய தெரிஞ்சா தான் தேர்தல்ல ஜெயிச்சு CM ஆக முடியாதுனு நாஞ்சில் சம்பத் 3 கோடி ரூபாய் இன்ஸ்பெக்டருக்கு கொடுக்க அவர் அதில் கொஞ்சம் கோவைசரளாவிற்கு கொடுத்து கேசை வாபஸ் வாங்க சொல்லும்போது அதை மறுத்து கோவைசரளா இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு மலை யில் இருந்து இறங்கி தம்பிராமையாவின் பஸ்சில் ஏறி தப்பிக்க முயற்சி செய்யும் போது அட்வகேட் அஸ்வின்குமார் உதவி கிடைக்குது ,இந்தசூழலில் கோவைசரளா எப்படி தப்பித்து தன் பேதியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டணை வாங்கி கொடுத்தாரா இல்லையா என்பது தான் மீதி கதையே .
செம்பியின் பிரச்சனையை வைத்து CM ஆக இருக்கும் நாஞ்சில் சம்பத்துக்கு மட்டுமல்ல ,பத்திரிகையாளர்களுக்கும் செம்பி போட்டோவோ அவருக்கான ஆதரவோ பெரிதாக கிடைக்காமல் இருப்பது எப்படி
பஸ்சுக்குள் பயணிகள் பேசும் கருத்துக்கள் ரசனைக்கு எதிரான வெறுப்புகள் ,ஜீவன் ஒளிப்பதிவும் ,நிவாஸ் பிரசன்னா இசையும் ரசனை .அரசியல் நையாண்டியை அவ்வப்போது பேசுவதும் வெறுப்பு