க னெ க் ட் திரைவிமர்சனம்

க னெ க் ட்
திரை விமர்சனம்
சீக்கிரமே பேய்கள் ஒன்று கூடி தமிழ் பட இயக்குனர்களுக்கு எதிரா சாலைமறியல் போராட்டம் செய்ய வாய்ப்பிருக்கு உளவு துறை எச்சரிக்கை ,பேயை நினைத்து மக்கள் பயந்த காலம் மாறி இப்போ தமிழ் சினிமா இயக்குனர்களை பார்த்து பேய்கள் பயப்படுது ,எவ்வளவு பேய்ப்படம் ,செத்தவங்கள விட பேய் படங்களின் எண்ணிக்கை அதிகம்
ரிச்சா டீசன்டா பேய் படம் எடுத்தா அது மாயா ,பிசாசு ,நானே வருவேன் மாதிரி வரும் ,
கொஞ்சம் லோக்கலா ,கோவைசரளா மாதிரி கத்திகிட்டே இருந்தா அது அரண்மனை 1 2 3,காஞ்சனா 1 2 3 பேய் படங்கள் ,
கொரோனா லாக் டவுன் போது ,கணவன் டாக்டர் வினய் யை இழந்த நயன்தாரா வின் மகள் நப்பீஷா மீது ஆவி பிடிக்கிறது ,இந்த ஆவியை அனுபம்கர் ,அப்பா சத்யராஜ் இவர்கள் உதவியோடு எப்படி விரட்டறாங்க என்பது தான் கதையே ,நயன்தாரா அதிகமா எல்லாக் காட்சிகளிலும் அதிகமா நடிச்சிருக்காங்க ,நயன்தாரா வை விட நப்பீஷா சிறப்பாக நடிச்சிருந்தாலும் எந்த ஷாட் ளையும் அவங்க நடிப்பு தெரியாத அளவுக்கு லைட்டிங் செய்து நயன்தாராவை திருப்தி படித்தியிருக்கார்றாரு கணவனும் ,இந்த பட தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன் ,இசை பிருதிவிசந்திரசேகர் சிறப்பாகியிருக்கிறார் .
இயக்குனர் அஸ்வின்சரவணன் கொரோனா பயம் ,பேய் பயம் ,வீடியோ கால் மூலம் பேய் ஓட்டுவது னு நிறைய முயற்சி செஞ்சி 90 நிமிட படத்தை எடுத்து முடிக்க ரொம்பவே மெனக்கெட்டும் திருத்தியா அமையல .

About Author