கொன்றால் பாவம்-திரைக்கருத்து

கொன்றால் பாவம் – திரைகருத்து-கே .பாலச்சந்தர் அவர்களின் சில படங்களுக்கு ஒரு படி மேலே பேசப்பட்டிருக்கும்
ரொம்ப நாள் பசியோடு இருப்பவன் முன் திருட்டு சாப்பாட்டை வைத்தால் தோல்வி அடைவது சாப்பாடா அல்லது தோல்வி அடைவது அவன் நேர்மையா,என்ற மனப்போராட்டத்தின் முடிவே இந்தப்படம் .
கற்பனையை விட கொடூரமானது உண்மை என்ற வரியோடு இந்தப்படம் தொடங்குகிறது .
இந்தப் படத்தோட கதை 1981 ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் பென்னகரத்தில் ,வறண்ட பூமியில் சார்லி, அவர் மனைவி ஈஸ்வரிராவ் ,மகள் முதிர்கன்னி வரலட்சுமிசரத்குமார் மூவரும் கடனோடும் ,வறுமையிலும் வாழ்கிறார்கள் இவர்கள் வீட்டிற்கு கெஸ்ட்டாக ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டு செல்வதாக சொல்லி சந்தோஷ் பெரும் பணத்தோடும் நகையோடும் வருகிறார் .சந்தர்ப்பமும் ,சூழ்நிலையும் இந்த நான்கு பேரையும் என்ன செய்கிறது என்பது தான் கதையே .வரலட்சுமியை பார்த்த உடன் இவரை ஏன் இந்த படத்துல நடிக்க வச்சாங்க என்கிற எரிச்சல் தோன்றினாலும் ,இரண்டாம் பாதி பார்க்கும் போது .வரலட்சுமியை தவிர இந்த கேரக்டரில் யாரும் இவ்வளவு சரியா பொருந்தியிருக்க மாட்டார்கள் என்று மிரள வைக்கிறார் .இயக்குனர் தயாள்பத்மநாபன். இந்த படத்தின் பெரும் பலம் ,துல்லியமான இசை ,மூடுக்கு தகுந்த ஒளிப்பதிவு ,நடிகர்கள் என படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் .1981 ல் இந்த படம் ரிலீஸ் ஆகி இருந்தால் இயக்குனர் கே .பாலச்சந்தர் அவர்களின் சில படங்களுக்கு ஒரு படி மேலே பேசப்பட்டிருக்கும்