குpட் நைட் -திரைவிமர்சனம் -குறட்டை வெற்றிக்கான வேட்டையா ? ஓட்டையா

குpட் நைட் -திரைவிமர்சனம் -குறட்டை வெற்றிக்கான வேட்டையா ? ஓட்டையா ?
ஒவ்வொருவருக்கும் அவர்களின் அமைதியான தூக்கம் தான் அது குட் நைட்டா ?பேட் நைட்டா ?என்பதை முடிவு செய்யும் . பத்து சிங்கத்து மத்தியில கூட தூங்கிடலாம் பாழாப்போன குறட்டை சத்தத்துல மட்டும் தூங்க முடியாது .
ஆக சிறந்த அப்படி குறட்டை விடுற ஹீரோ மணிகண்டன் உடன் கல்யாணம் ஆகி முதல் இரவை துவங்கராங்க ஹீரோயின் மேத்தாரகுநாத் பல இரவுகள் ,பல ட்ரீட்மெண்ட்களை கடந்தும் மணிகண்டனின் குறட்டை குறையில .அவர் ஆபிஸ் டார்ச்சரும் குறையில .இதனால கணவன் மனைவிக்குள்ள பிரியர சூழல் உருவாகி அவர்களின் உண்மை காதல் இணைய வைக்குது .
இந்த கதையை இரண்டு மணிநேரத்துக்கு சொல்ல முடியாதுனு புரிஞ்சு கிட்ட இயக்குனர் விநாயக்சந்தரசேகரன் புத்திசாலித்தனமா ஹீரோவிற்கு யதார்த்தமா நடிக்க கூடிய அம்மா ,அக்கா ,மாமா ரமேஷ்திலக் ,தங்கச்சி ,தாத்தா பாலாஜி சக்திவேல் ,பாட்டி ,நாய் குட்டின்னு ,சின்ன டீமை பெருசா நடிக்கவச்சு ,சிரிக்க வச்சு,சின்னதா ஜெயிக்க வச்சிருக்கறாரு ,குறிப்பா மேத்தாரகுநாத் ராசி இல்லாதவர் அப்பா அம்மாவை காவு வாங்கியவர் என்ற குற்ற உணர்வு உள்ளவர் என்பதை அவரின் பேச்சு ,அமைதியான அணுகு முறையில் அற்புதமா வெளி கொண்டு வந்திருக்கறாரு .
சீரியல் தனமான சில காட்சிகள் ,ஹீரோ,ஹீரோயின் இருவருக்குமான பிரச்னை குரிய காட்சிகளில் பலம் இல்லாதது,மவுனராகம் படத்தின் பாதிப்புள்ள கிளைமாக்ஸ் காட்சிகள் இவற்றை தவிர்த்து இருக்கலாம்
குட் நைட் பார்ப்பவர்களுக்கு குட் டைம்

About Author