காந்தாரா – A LEGENT CHAPTER-1-திரை விமர்சனம்
காந்தாரா –
A LEGENT CHAPTER-1-திரை விமர்சனம்
ஒரு ஹீரோ தன்னை நம்பி வருபவர்களை ,வாழ்பவர்களை காப்பாற்றி வாழ வைக்க வேண்டும் . ஆபத்தில் அனாதையாக விட்டு விட்டு ஓட கூடாது. இந்தப்படத்து ஹீரோ ரிசப்ஷெட்டி தன்னை நம்பிய மக்களை வருவோர் ,போவோர் களிடம் அடிவாங்க வைத்து அழிவை உருவாக்கி முடிவில்லாமல் சாமி பிள்ளையாக மாறுவதில் ஒரு பயனும்,வெற்றியும் இல்லை .
கதை -1000 வருடத்திற்கு முன்னாடி மலைப்பிரதேசத்தில் வாழும் ஏறக்குறைய 100 பேர் கொண்ட ஒரு கூட்டம் அதன் தலைவன் ஹீரோ ரிசப்ஷெட்டிஇவர்கள் மிளகு ,மசாலா பொருட்களை அறுவடை செய்கின்றனர் அதிக மதிப்பு மிக்க இந்த பொருட்களை கொள்ளை அடிக்க அருகே இருக்கும் குறு நில மன்னன் ஜெயராமன் மகன் நுழைய அவர்களை அடித்து விரட்டும் ஹீரோ டீம் அவர்களை நோக்கி நாம் போய் வியாபாரம் செய்யலாம் என கிளம்பி பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள் .இதற்கு மத்தியில் ஹீரோ இருக்கும் ஈசுவர தோட்டத்தில் உள்ள தெய்வங்களை இன்னொரு டீம் தங்கள் மந்திரத்தால் கட்டிபோடுகிறார்கள் ,இந்த ரெண்டு டீமையும் ஹீரோ தன் குலசாமி காந்தாரா சக்தியுடன் அழித்து ,அடுத்த chapter க்கு லீட் கொடுத்து மறைகிறார் .லாஜிக்கே இல்லாத ,ரசிக்க முடியாத தந்திர காட்சிகள் ,floor உள்ளே compact ஆக எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் இதில் எதுவும் பிரமிப்பை தரவில்லை .பெரும் சப்தத்தோடு சாமியாடுவது அடிக்கடி வருவதால் அதுவும் போரடிக்கிறது .ஹீரோ தன் கூட்டம் யாருக்கும் அடிமை இல்லை தாங்கள் அறுவடை செய்யும் மிளகு போன்ற விலை உயர்ந்த பொருட்களை தரகர் இன்றி நேரடியாக விற்று அடுத்த தலை முறையை உயர்த்தலாம் என்று வெறும் வசனமாக மட்டும் பேசாமல் காட்சியாக வைத்து இருந்தால் படம் வெற்றி தளத்தை தொட்டிருக்கலாம்
