காந்தாரா- திரைவிமர்சனம்

காந்தாரா- திரைவிமர்சனம்-கிளைமாக்ஸ் சண்டையில் ஹீரோ ரிஷாப் ஷெட்டிக்குள் சாமி நுழைந்த பிறகு அவர் சண்டையிட்டுக் கொண்டே கொடுக்கும் அந்த இரண்டு நிமிட மூவ்மெண்டுக்காக இரண்டு மணிநேர படத்தை நாம் பொறுமையாக பார்க்கலாம்

1847ல ஒரு ராஜா நிம்மதியை தூக்கத்தை தந்த சாமிக்காக மலைகிராம மக்களுக்கு தன் நுறு ஏக்கர் நிலத்தை தானமாக தருகிறார் அந்த ராஜாவின் வாரிசு1990ல் அந்த கிராம மக்களுக்கு உதவி செய்து அந்த நிலத்தை பிடுங்க திட்டமிடுகிறார் இதே நேரத்தில் பாரஸ்ட் ஆபிசர் கிஷோர் இந்த இடத்தை ரிசர்வ் பாரஸ்ட் ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கிறார் கிளைமாக்சில் மூன்று குரூப்பும் ஆயுதம் எடுக்க பெரும் மோதல் ஏற்படுது மலை சாமி தீயவர் யார் என மக்களுக்கு புரிய வைத்து அழித்து ,வாழும் நம்பிக்கையை உருவாக்குது கன்னடர்களுக்கு இந்த மேக்கிங் புதுசா இருந்தாலும் நாம் பார்த்து பழக்கப்பட்ட மேக்கிங் தான் ஹீரோ உட்பட எல்லோரும் முழு அர்பணிப்போடு நடித்தது படத்தை வெற்றியடைய வைக்குது ஒளிப்பதிவும் பின்ணனி இசையும் படத்தின் இரு ஆத்மாக்கள்

About Author