காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் :ஜெயித்தது கத்தியா ?? கதையா ?? திரைவிமர்சனம்

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் :ஜெயித்தது கத்தியா ?? கதையா ??
திரைவிமர்சனம்
ஒரு ஆடு கூட தனக்கு தேவையான இலைய தேடி போகுது ஆனா நம் இயக்குனர்கள் கதைய தேடி ஏன்
போகமாட்டக்கறாங்க ? நேரம் இல்லையோ ?
அதுவும் முத்தையா மாதிரியான இயக்குனர்கள் தலைப்பையும் ,ஆர்டிஸ்டுகளையும் மட்டும் மாற்றி ,லொக்கேசன் ,பகைமை ,டையலாக் மாடுலேசன் ,ஏன் ஹீரோவோடு மீசை முடிய கூட மாத்தாம படம் எடுக்கறாங்க பல பேரோட பணம், நேரத்தை செலவழிக்க வைக்கறாங்க ..
சரி இந்த படத்துல என்ன சொல்லறாருன்னா —–
இந்த ஊருல இருக்கு கதிர்வேலுக்கும் ,காதர்பாட்சாவுக்கும் பங்கு அதை பிரிக்க நினைக்கறவனுக்கு சங்கு ,

மாட்டுக்கறிய திங்கறவன் பசுவை சாமியா கும்பிடுவான் பசு வேற, மாடு வேற, அதனால இந்த ஊர்ல பசுவை வச்சி அரசியல் செய்ய வேண்டாம்,

சொல்லிக்கத்தான் இந்து ,இஸ்லாம் ஆனா ஒருத்தர் வீட்டு குழந்தைங்க இன்னொருவர் வீட்டில் வாழறதுலாம் சகஜம் னு தென் மாவட்டத்துக்கு தேவையான வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நல்ல கருத்தை சொன்னாலும் இதை தாங்க முடியாத வன்முறையோடு சொல்லியிருக்கிறார்.
கதை —- நாம எத்தனை முறை பார்த்தாலும் முத்தையா மட்டும் தான் இந்தப் பட கதையை சரியா சொல்ல முடியும்
ஏனா ? கதைக்குள் நிறைய கிளை கதைகள் இருக்கு மனசுல வச்சிக்கறது கஷ்டம் .இருந்தாலும் முயற்சி பண்ணுவோம் .
இஸ்லாம் பிரபு வீட்ல இந்து ஆர்யா பிறந்து குழந்தையில் இருந்து முஸ்லீமா வளர்றாரு,வில்லன் நரேன் மற்றும் அவரோட மூன்று பசங்க இந்து இஸ்லாம் ஒற்றுமையை களைத்து தேர்தலில் ஜெயிக்க திட்டம்போடுறாங்க இதை பிரபு ஏற்றுக்காததால் பிரபுவின் மகளை காதல் திருமணம் செய்த நரேனின் மகன் பிறந்த குழந்தையை கொன்று புதைக்க பிரபுவின் மகள் தன் வீட்டுக்கே வந்து விடுகிறார் .இதனால் நரேன் குடும்பமே ஆர்யாவுக்கு எதிரி ஆகிறது .
இவர்களோடு ஆர்யா கல்யாணம் செய்து கொண்ட ஹீரோயின் சித்திஇத்தானி யின் அண்ணி குடும்பத்தை சேர்ந்த நான்கு வில்லன்களும் சேர்ந்து ஆர்யா குடும்பத்தை அழிக்க தொடங்குகிறார்கள் இந்த சூழலில் ஆர்யா எடுக்கும் முடிவு தான் படத்தின் முடிவு .
நிறைய ரத்தமும் ,தூசும் ,அழுக்கும் உடம்பில் ஒட்டி கொண்டது போல ஒரு பீலிங் தியேட்டரை விட்டு வெளியே வரும் போது …

About Author