கப்ஜா-திரைவிமர்சனம்

கப்ஜா திரைவிமர்சனம்
பான் இந்தியா மூவி என்றால் என்ன?.
பாவமா ,குடிக்க கஞ்சிக்கே வழியில்லாம இருக்கற ஆயிரம் பேரை மிரட்டி வேலைவாங்கும் வட்டத்து வில்லன் இந்த வில்லனை கட்டுப்படுத்துற மாவட்டத்து வில்லன் ,இந்த வில்லனை கட்டுப்படுத்துற மாநில வில்லன் ,இந்த வில்லனை கட்டுப்படுத்துற ஆல் இந்திய வில்லன் ,இந்த வில்லன்களை அடிக்கற ஹீரோ ,இந்த ஹீரோவை அழிக்க அரபு நாட்டு வில்லனும்,அந்த நாட்டு ஆயுதத்தோட பல லாரிகள் வரும் அப்பறம்,சண்டை கிளைமேக்ஸ் ல ஹீரோ செத்தாரா ? பொழச்சாரான்னு தெரியாத open end ,இதுதான் பான் இந்தியா மூவினு நமக்கு காட்டிகிட்டு இருக்காங்க ,இந்தப்படத்து கதையில ஹீரோ உபேந்திரா நான் ஏற்கனவே சொன்ன வில்லன்களோட மோதி தன் காதல் மனைவி ஸ்ரேயா ,தன் ரெண்டு பசங்க , கஞ்சிக்கே வழியில்லாத அந்த எட்னூறு பேரை (ஆயிரம் பேத்துல இருநூறு பேரை வில்லன் போரடிக்கும் போது கொன்னுட்டான் )
காப்பாத்தறாரா இல்லையா என்பது தான் கதை இது பார்ட் 2 லயும் தொடரும் .

About Author