கட்டா குஸ்தி- திரைவிமர்சனம்

கட்டா குஸ்தி- திரைவிமர்சனம்
தலைவலி வந்தவங்க தைலம் போட்ட உடனே கிடைக்கும் தற்காலிக நிவாரணம் மாதிரி தற்காலிக சிரிப்பை தன் வசனத்தால் நடிகர்களிடம் பேச வச்சு சிரிக்க அப்பப்ப ரசிக்க வச்சிருக்கறாரு இயக்குனர் செல்லஅய்யாவு ,இந்த படத்தோட கதை விஷ்ணுவிஷால் பொள்ளாச்சியில் மாமா கருணாஸ் நண்பன் வக்கீல் காளிவெங்கட் உடன் வெட்டியா சுத்திக்கிட்டு உதார் விட்டுகிட்டு ,நீளமான முடி ,எட்டாவதுக்கு மேல படிக்காத ,புருசனுக்கு அடங்கி போற பொண்ண தேடிகிட்டு இருப்பாரு ,கேரளா பாலக்காட்டுல மல்யுத்த வீராங்கனையா பாப் கட் வெட்டிக்கிட்டு தப்ப அடிச்சி கேக்குற பிஎஸ்சி முடிச்ச ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி ,இவரோட சித்தப்பா முனீஸ்காந்த் ,இவர் ஐஸ்வர்யாலட்சுமி க்கு சவுரிமுடிய நீளமா வச்சும் ,ஏழாவது தான் படிச்சதா பொய் சொல்லி கல்யாணம் செஞ்சிடறாங்க .தொடர் பகையால் வில்லன் கோஷ்டி கோவிலுக்கு வந்த விஷ்ணு விசாலையும் ஐஸ்வர்யா லட்சுமி ,யையும் அடிக்க பதிலுக்கு திருப்பி வில்லன் கோஷ்டியை அடி பின்னி எடுத்திருவாங்க அப்போ சவுரி வச்சதும் விஷ்ணுவிஷால் லுக்கு தெரிஞ்சிருது மற்ற உண்மைகளும் தெரியுது .அதன் பிறகு என்ன நடக்குது என்பது தான் படத்தோட மீதி கதையே . பொண்டாட்டிய கன்ரோல்ல வச்சிக்க கருணாஸ் தரும் ஐடியா முட்டாள் தனமானது சிரிக்க கூடியது ,கூடவே வக்கீல் காளிவெங்கட் ஒரு பெட்டியை வச்சி அதுக்குள்ள டூத் பேஸ்ட் ,ப்ரஸ் ,பவுடர் வச்சிக்கிட்டு பொண்டாட்டி போன் செஞ்சவுடன் போதையில் தயாராவதும் சேர்ந்துக்குது .கணவன் மனைவி இடையே ஆன சின்ன சின்ன சண்டையை இயக்குனர் உக்ரைன் ரஷ்யா சண்டை அளவுக்கு பயமுறுத்தி இருப்பது தேவையற்றது ,பெண்ணாசை கொண்டவராக வழக்கமான கோச் .இரண்டாம் பாதியில் வரும் தொய்வு இவற்றை சரி செய்திருக்கலாம் .