அழகிய கண்ணே -வெற்றிக்கு வாசலா ?? வலியா??

அழகிய கண்ணே -வெற்றிக்கு வாசலா ?? வலியா??
திரைவிமர்சனம் …
நமது இந்திய கிரிக்கெட் டீமில் வெற்றியடைய கூடிய மேட்சில் கேப்டன் ரன் அடிச்சா செயிச்சுடலாம் என்கிற சூழலில் கேப்டன் {அழகிய கண்ணே இயக்குனர் ஆர் .விஜயகுமார் ) ரன் எடுக்காமல் போக அறிமுக வீரர்{ஹீரோ லியோ சிவகுமார் } முதல் மேட்சில் சிறப்பாக ஆடி ரன் எடுத்தும் வெற்றிக்காக போராடிக்கிட்டு இருக்கற மாதிரி இந்த படம் அமைஞ்சியிருக்கு .
ஹீரோ லியோ சிவகுமார் நடிப்பு ,டான்ஸ் ,பைட் என தன்னை தயார் படுத்திகொண்டு சரியாக செய்திருந்தாலும் .இயக்குனர் கதைக்காகவோ ,
மேக்கிங்காகவோ தன்னை தயார் செய்யாமல் இந்த படத்தை உருவாக்கி இருப்பது தெரியுது .
இந்த படத்தோட கதை -கிராமத்தில் சிவப்பு சிந்தனை உடைய ஹீரோ திரை பட இயக்குனர் ஆக சென்னை வந்து பிரபுசாலமனிடம் அசிஸ்டெண்டாக சேருகிறார் .கிராமத்தில் தன் எதிர் வீட்டு பிராமண பெண் சஞ்சிதா ஷெட்டியை காதலிக்கிறார் ,அந்த பெண்ணுக்கு சென்னையில் வேலை கிடைக்க இருவரும் கலயாணம் செய்து ஒரு குழந்தையும் பிறக்கிறது .ஹீரோ விற்கு ஹீரோ விஜய்சேதுபதி படம் இயக்க வாய்ப்பு கொடுக்க சில சனாதன சக்திகள் ஹீரோ ,ஹீரோயின் இருவரையும் வாழ விட்டதா? இல்லையா? என்பது தான் முடிவே