விடுதலை -திரைவிமர்சனம் வீரப்பன் கதையா

விடுதலை -திரைவிமர்சனம் வீரப்பன் கதையா

பொன்பரப்பி தமிழரசன் கேரக்டரையும் சந்தன வீரப்பனை பிடிக்க வந்த STF (special task போர்ஸ் இன்னும் இவர்கள் கேம்ப் மேட்டூரில் இருக்கு )போலீசாரால் பாதிக்கப் பட்ட மக்களின் துயரத்தையும் கலந்து தருமபுரி மாவட்டத்தில் இந்த படத்தின் கொடூரம் நிகழ்வதாக கதை எழுதி அதிகபடியான யதார்த்ததோடு இயக்கி இருக்கறார் வெற்றிமாறன் .
போலீஸ் கேம்புக்குள்போலீஸ்களுக்கு நடக்கும் கொடுமை ,ஊர் மக்களுக்கு போலீசார் கொடுக்கும் தண்டனை ,நக்சலைட்டுகள் போலீஸ் மோதல் , இதற்குள் சின்னதாக ஒரு காதல் என நான்கு பகுதிகளாக காட்சிகள் தொட்டு தொய்வாக சென்றாலும் இரண்டாம் பாதியை போலீசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள காட்சிகளால் கனமான கிளைமாக்ஸ் ,விசாரணை 2 கான முன்னோட்டம் என படத்தை முடித்திருக்கிறார்.இசைஞானியின் பின்னணி இசை ,காட்சிகளோடு கலந்து பேசுகிறது .வேல்ராஜின் ஒளிப்பதிவு silent ஷாட்டிலும் பயத்தை உருவாக்குது .
இப்போ கதை என்னானு பார்ப்போம்.மக்கள் படை அருமபுரி மலைப்பகுதி மக்களுக்காக மற்றும் சமூக நீதிக்காக போராடுது .இவர்களுக்கு எதிராக ஆயுத வன்முறையை போலீஸ் எடுப்பதால் மக்கள் படையினரும் ஆயுதம் எடுத்து போராடுகிறார்கள் .இவர்களின் தலைவர் பெருமாள் வாத்தியார் பற்றி போலீசாருக்கு தெரியாத சூழலில் போலீஸ் கேம்பில் போலீஸ் டிரைவராக வந்து கிராம மக்களிடம் மனிதாபினமாக நடந்து கொள்ளும் சூரி தான் காதலிக்கும் பெண்ணையும் ,அந்த ஊர் மக்களையும் நிர்வாண கொடுமை படுத்தும் போலீசிடமிருந்து அவர்களை காப்பாற்ற பெருமாள் வாத்தியார் இருக்கும் இடம் தெரியும் என டி எஸ் பி கவுதம்மேனனிடம் சொல்லி போலீஸ் படையுடன் சென்று பெரும் சண்டைக்கு பிறகு பெருமாள் வாத்தியார் விஜய்சேதுபதியை பிடித்து கைது செய்கிறார் ,ஆனால் ஊர் மக்கள் காப்பாற்ற பட்டனரா என்பது விடுதலை பாகம் -2ல் தெரியும் .
சூரி யதார்த்தமாக ,அலட்டிக்கொள்ளாமல் நடித்து எல்லா எமோஷனையும் கொண்டுவருகிறார் .
விஜய்சேதுபதி கெட்டப் அவருக்கான புதுசு

About Author