லவ் டுடே- திரை விமர்சனம்

காதலர்களும் ,காதலை அப்ரோச் செய்யறவிதமும் ,ஒரு காதல்ல இரண்டுபேர் மட்டும் காதலிக்கறாங்களா இரண்டுக்கு மேற் பட்டவர்கள் காதலிக்கறாங்களா ,காதலர்கள் என்பவர்கள் கல்யாணம் ஆனவர்களுக்கும் கல்யாணம் ஆகாதவர்களுக்கும் செய்வதா ,இருபதுக்கும் அறுபதுக்கும் இடையே நடக்கிறதா என்பதெல்லாம் விஞ்ஞான காலத்துக்கு தகுந்த மாதிரி மாறும் ஆனா எப்பவும் மாறாதது காதல் மட்டுமே .2000 கிட்ஸ் காதல் செய்ய செல்போனை மட்டுமே பயன்படுத்தறாங்க ,இப்போ பெத்தவங்கள விட காதலை சேர்க்கறதும் ,பிரேக் ஆப் செய்யறதும் அவங்களோட செல்போன் தான் , டைரக்டரும் ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதன் செல்போனையும் அவர் காதலிக்கற இவனா செல்போனையும் ,இவனா அப்பா சத்யராஜ் ஒரு நைட் மட்டும் மாத்தி கொடுக்கறாரு ,அடுத்தநாள் சண்டை ,சந்தேகம் இல்லாம இருந்தா கல்யாணம் செய்துவைப்பதாக சொல்லறாரு ,ஆனா ஒரு நைட்ல ரெண்டு பேரும் செல்போனை நோண்டி சந்தேகப்பட்டு வார்த்தையால் குத்தி கிழிச்சு ரணம் ஆக்கிகிறாங்க ,இதை தெரிஞ்சிகிட்ட ஹீரோ அம்மா ராதிகா ,காதலின் நேர்மையை உணர்த்தி காதலர்களை சேர்த்து வைக்கிறாங்க .இதுக்கு சப்போட்டா யோகிபாபு செல்போனும் அவர் கேரக்டர்சேஷனும் உதவுது .ஒரு மாம்பழம் கொட்டைய வைத்து காதலின் நம்பிக்கையை சொன்ன இயக்குனர் பாராட்டுக்குரியவர் ,அதே சமயம் நிறைய காட்சிகளை அழுத்தமாக சொல்லாதது அனுபவம் ,இல்லாததையும் அவசரத்தையும் காட்டுது யுவன்ஷங்கர் ராஜா இசை நிறைவு , இன்னொரு எஸ் ,ஜே .சூர்யா வாக தெரிகிறார் பிரதீப் ரங்கநாதன் மொத்தத்தில் லவ் டுடே யூத் டுடே