ருத்ரன் -திரைவிமர்சனம் -சுடுதண்ணி ஊத்திகிட்ட வாயில மிளகா பொடி

ருத்ரன் -திரைவிமர்சனம் -சுடுதண்ணி ஊத்திகிட்ட வாயில மிளகா பொடி

அவசரத்துல சுடுதண்ணி குடிச்ச வாயில சூடு தாங்காம இருக்க பக்கத்துல இருந்த மிளகா பொடிய வாயில அள்ளி போட்டவனோட நிலைமை தான் படம் பார்க்கும் ரசிகனுக்கும் ,ரிலீசான பிறகு படம் எடுத்தவங்களோட நிலைமையும் ,
ராகவா லாரன்ஸ் -ருத்ரன் படம் ஜெயிக்கணுமுனா கர்ப்பமான மனைவி ப்ரியாபவானி சங்கரை கொடூரமா கொல்லு ,அஞ்சு வயசு மகளை அனாதை ஆக்கு ,அப்பா நாசர் ,அம்மா பூர்ணிமா பாக்யராஜ் ,நண்பன் காளிவெங்கட் இவங்களையும் கொல்லு ,பத்தலையா வில்லன் சரத்குமார் அவர் கூட்டதை சேர்ந்த பல பேரைக்கொல்லு ,அதுவும் பத்தலையா பல கிழவன் ,கிழவிகளை கொள்ளு இன்னும் பத்தலையா ருத்ரன் பார்ட் 2 படத்துல பார்த்துக்கலாம் ஆனா உணர்ச்சி வசப்பட்டு தியேட்டருக்கு வெளியே வந்து ஏடா கூடமா செஞ்சு நிஜ போலீஸ் கிட்ட மாட்டிக்காதீங்க இந்த பட படைப்பாளிகளே .
சரி இந்த படத்துல என்னதான் நல்லாயிருக்குனா ராகவா லாரன்சின் டான்ஸ் மட்டுமே ,மேல படிச்சிருந்தாவே இந்த பட கதை உங்களுக்கு புரிஞ்சிடும் ,தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி இருக்கறாரு.காய்கறிகளை விளைவிக்கிறவன் வேற ,அதை சுவையா சமைக்கறவன் வேற சார் ,நீங்க நல்லா விளைச்சலை சினிமாவுல தந்தவாறு உங்களுக்கு ஏன் இந்த வேண்டா வேலை

About Author